Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 78)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

இது, சுத்தஸத்வமென்றும், மிச்ரஸத்வமென்றும், ஸத்வசூந்யமென்றும் த்ரிவிதம்.

இப்படி இதினுடைய லக்ஷணத்தை அருளிச்செய்த வநந்தரம், இவ்வசித் தத்வந்தான் ஸத்வைகாதாரமாயும், ஸத்வாதி குண த்ரயாதாரமாயும், ஸத்வாதி குண சூந்யமாயும், மூன்று வகைப்பட்டிக்கும்படியை அருளிச்செய்கிறார்.

இவ்விதம் அசித் வஸ்துவின் தன்மையை அருளிச்செய்த பின்னர், இந்த அசித் வஸ்துவானது “ஸத்வ குணத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது, ஸத்வம் முதலான மூன்று குணங்களையும் ஆதாரமாகக் கொண்டது, ஸத்வம் முதலான மூன்று குணங்களும் இல்லாமல் உள்ளது”, என்பதாக மூன்றுவிதமாக உள்ளதை அருளிச்செய்கிறார்.

(இது, சுத்தஸத்வமென்றும், மிச்ரஸத்வமென்றும், ஸத்வசூந்யமென்றும் த்ரிவிதம்) என்று.

அசித் வஸ்துவானது, “ஸத்வகுணம் மட்டுமே கொண்டது, மூன்று குணங்களுடைய கலவையாக உள்ளது, ஸத்வம் போன்ற குணங்கள் இன்றி உள்ளது” என மூன்றுவிதம் ஆகும்.