Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (Pravesam 1)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இரண்டாம் ப்ரகரண ப்ரவேசம்
தத்வ த்ரய இரண்டாம் ப்ரகரண வ்யாக்யான அவதாரிகை
தத்வத்ரயத்தில் தத்வத்ரயமாவது சித்தும், அசித்தும் ஈச்வரனும் என்று உத்தேசித்த க்ரமததிலே, ப்ரதமம் சிச்சப்த வாச்யனான ஆத்மாவினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை ஸ்புடமாக அருளிச்செய்தார் கீழ்; அநந்தரம், அசித் வஸ்துவினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை அதிஸ்புடமாக அருளிச்செய்கிறார்.
தத்வத்ரயத்தில், “தத்வத்ரயம் என்பது சித், அசித் மற்றும் ஈச்வரன்” என்று தான் கருதிய விதத்தில், முதலில் “சித்” என்ற சொல்லால் கூறப்படும் ஆத்மாவின் தன்மைகள் மற்றும் இயல்புகளையும், அவற்றின் சிறப்புகளையும் தெளிவாக இதுவரை அருளிச்செய்தார். தொடர்ந்து, அசித் வஸ்துவின் தன்மை மற்றும் இயல்பின் சிறப்புகளை மிகவும் தெளிவாக அருளிச்செய்கிறார்.