Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 75)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஈச்வராத்மகமாகையாலேயெல்லாப் பதார்த்தங்களுக்கும் ஆநுகூல்யமே ஸ்வபாவம், ப்ராதிகூல்யம் வந்தேறி.
இவை தனக்கு ஸ்வாபாவிக வேஷமேது? என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் (ஈச்வராத்மகமாகையாலே) என்று தொடங்கி.
இவற்றுக்கான இயல்பான வடிவம் எது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது “ஜகத் ஸர்வம் சரீரம் தே”, “தாநி ஸர்வாணி தத் வபு:”, “தத் ஸர்வம் வை ஹரேஸ்தநு:” என்று ஸகலபதார்த்தங்களும் பகவச் சரீரமென்று சாஸ்த்ரங்களிலே சொல்லப்படா நின்றதிறே. அப்படி பகவதாத்மகமாகக் காணும்போது, ஸகலமுமநுகூல்மாய்க்கொண்டு தோற்றுகையாலே எல்லா பதார்த்தங்களுக்கும் ஆநுகூல்யமே ஸ்வபாவம்; இவற்றில் தோற்றுகிற ப்ராதிகூல்யம் தேஹாத்ம ப்ரமாதி மூலமாகையாலே வந்தேறி என்கை.
அதாவது, யுத்தகாண்டம் (120-126) - ஜகத் ஸர்வம் சரீரம் தே - இந்த ஜகத் முழுவதும் உனது சரீரம் - என்றும், ஸ்ரீவிபு. (1-22-86) - தாநி ஸர்வாணி தத் வபு: - இந்த அனைத்தும் அவனுடைய சரீரம் – என்றும், ஸ்ரீவிபு (1-22-78) – தத் ஸர்வம் வை ஹரேஸ்தநு: - அனைத்தும் ஸ்ரீஹரியின் சரீரம் - என்றும் உள்ள பல வாக்கியங்கள் மூலம், “அனைத்து வஸ்துக்களும் பகவானுடைய சரீரம் ஆகின்றன” என்று சாஸ்த்ரங்களில் கூறப்பட்டது அல்லவோ? அவ்விதம் அனைத்திற்கும் ஆத்மாவாக பகவான் உள்ளான் என்று காணும்போது, அனைத்தும் இனிமையாகவே தோன்றுவதால், அனைத்து வஸ்துக்களுக்கும் “ஏற்புடையது ஆகும்” என்பது இயல்பாக உள்ளது. ஆனால் இவற்றில் தோன்றுகின்ற “ஏற்புடையது அல்ல” என்ற எண்ணமானது, சரீரத்தையே ஆத்மா என எண்ணி மயங்கும் நிலையால் வந்தது என்று கருத்து.