Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 74)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
விஷசஸ்த்ராதிகளைக் காட்டும்போது ப்ரதிகூலமாயிருக்கைக்கடி தேஹாத்ம ப்ரமாதிகள்.
ஆனால் விஷசஸ்த்ராதிகளை தர்சிப்பிக்கும்போது அவற்றை விஷயீகரித்த ஜ்ஞாநம் ப்ரதிகூலமாயிருப்பானேன்? என்கிற சங்கையை உட்கொண்டு அருளிச் செயகிறார் (விஷசஸ்த்ராதிகள்) என்று தொடங்கி.
ஆனால் ஆபத்து ஏற்படுத்தவல்லதான ஆயுதங்கள் குறித்து அறியும்போது, அவற்றை அறியும்படிச் செய்த ஞானமானது, ஏற்கத்தகாதபடி உள்ளது; இது ஏன் என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது அவற்றை தர்சிப்பிக்கும்போது அவற்றை விஷயீகரித்த ஜ்ஞாநம் துக்கரூபமாயிருக்கைக்குக் காரணம், அவற்றில் பாதகத்வ புத்திக்கு மூலமான தேஹாத்ம ப்ரமமும் கர்மமும் ஈச்வராத்மகத்வ ஜ்ஞாநராஹித்யமும் என்கை.
அதாவது அந்த ஆயுதங்கள் குறித்து அறியும்படிச் செய்யும் ஞானமானது, துக்க வடிவமாக உள்ளதற்கான காரணம் என்னவென்றால், அவற்றில் விரோதமான எண்ணம் ஏற்படுவதற்கு ஆதாரமாக உள்ள “சரீரமே ஆத்மா” என்ற சிந்தனையும், அதன் விளைவாக ஏற்படும் கர்மமும், ஈச்வரனே அனைத்தின் ஆத்மாவாகவும் உள்ளான் என்ற ஞானத்தின் இல்லாமையும் ஆகும்.