Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 71)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
அஜடமாகில் ஸுஷுப்தி மூர்ச்சாதிகளில் தோற்றவேண்டாவோவென்னில்.
கீழ் ஜ்ஞாநத்துக்குத் தாம் அருளிச்செய்த அஜடத்வ விஷயமான ஜிஜ்ஞாஸு ப்ரச்நத்தை அநுவதிக்கிறார்.
ஞானத்திற்கு தான் அருளிச்செய்த கருத்தான “அஜடமாக உள்ள தன்மை” என்பதைக் குறித்து அறிய விரும்புபவர்கள் எழுப்பும் கேள்வி குறித்து அடுத்து உரைக்கிறார்.
(அஜடமாகில் ஸுஷுப்தி மூர்ச்சாதிகளில் தோற்றவேண்டாவோ? என்னில்) என்று. அதாவது ஜ்ஞாநம் ஸ்வயம்ப்ரகாசமாயிருக்குமாகில் எப்போதும் ப்ரகாசிக்கவேண்டாவோ; ஸுஷுப்த்யாத்யவஸ்தைகளில் ப்ரகாசியாதொழிவானென் என்கை.
ஞானமானது ஆழ்ந்த உறக்கம், மயக்கம் போன்றவற்றில் வெளிப்படவல்லது என்றுள்ளபோது, அது எப்போதும் வெளிப்பட்டபடி இருக்கவேண்டாமோ? ஆழ்ந்த உறக்கம் முதலான நிலைகளில் ஏன் வெளிப்படுவதில்லை?