Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 69)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
த்ரவ்யமானபடி என் என்னில்?
இப்படியிருந்துள்ள ஜ்ஞானநித்யத்வத்தை அருளிச்செய்தாராய் நின்றார் கீழ்; இனி இதினுடைய த்ரவ்யத்வத்தை உபபாதிப்பதாக தஜ்ஜிஜ்ஞாஸு ப்ரச்நத்தை அநுவதிக்கிறார்.
இப்படியாக உள்ள ஞானத்தின் நித்யமான தன்மையை இதுவரை அருளிச்செய்தார். அடுத்து, ஞானத்தின் திரவியமாக உள்ள தன்மையை அருளிச்செய்வதற்காக, அதனைக் குறித்து அறிய விரும்புவர்கள் எழுப்பும் கேள்வியை உரைக்கிறார்.
(த்ரவ்யமானபடியென்? என்னில்) என்று.
ஞானம் திரவியமாக உள்ளது எப்படி?