Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 67)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

இந்த்ரிய த்வாரா ப்ரஸரித்து விஷயங்களை க்ரஹிப்பது மீளுவதாகையாலே, அப்படி சொல்லக் குறையில்லை.

அதுக்கு உத்தரமருளிச் செய்கிறார்.

அதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

(இந்த்ரிய த்வாரா ப்ரஸரித்து விஷயங்களை க்ரஹிப்பது மீளுவதாகையாலே, அப்படி சொல்லக் குறையில்லை) என்று. அதாவது, “ஸர்வம் ஹ பச்ய:, பச்யதி”, “ஸ சாநந்த்யாய கல்பதே” என்று, முக்த தசையில் ஸர்வ விஷயமாகச் சொல்லுகையாலே, ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிக்கைக்கு யோக்யமாயிருக்கச் செய்தேயும், “யயா க்ஷேத்ரஜ்ஞ சக்திஸ்ஸா வேஷ்டிதா ந்ருப ஸர்வகா” என்கிறபடியே, கர்மத்தாலே ஸங்குசிதமாய், “தயா திரோஹிதத்வாச்ச சக்தி க்ஷேத்ரஜ்ஞ ஸம்ஜ்ஞிதா, ஸர்வ பூதேஷு பூபால தாரதம்யேந வர்தததே; அப்ராணிமத்ஸு ஸ்வல்பா ஸா ஸ்தாவரேஷு ததோதிகா” என்கிறபடியே, கர்மாநுகுணமான தாரதம்யத்தையுடைத்தாய்க் கொண்டு, “இந்த்ரியாணாம் ஹி ஸர்வேஷாம் யத்யேகம் க்ஷரதீந்த்ரியம், தேநாஸ்ய க்ஷரதி ப்ரஜ்ஞா த்ருதே: பாதாதிவோதகம்” என்கிறபடியே, இந்த்ரிய த்வாரா புறப்பட்டு விஷயங்களை க்ரஹிப்பது மீளுவதாகையாலே, தாத்ருசமான விகாஸத்தாலும் ஸங்கோசத்தாலும் வந்த ப்ரகாசாப்ரகாசங்களைக் கொண்டு, பிறந்தது நசித்தது என்னக் குறையில்லை என்கை.

“இந்த்ரியங்கள் மூலமாக ஞானமானது உலக விஷயங்களை அறிந்து கொண்டு திரும்புதல்” என்றுள்ளதால், இவ்விதம் கூறுவதில் தவறில்லை. சாந். (7-26-2) - ஸர்வம் ஹ பச்ய: பச்யதி ஸர்வம் - அனைத்தையும் காண்பவன் (முக்தன்) அனைத்தையும் காண்கிறான் - என்றும், ச்வே. (5-9) - ஸ சாநந்த்யாய கல்பதே - அவன் எப்போதும் உள்ளவன் என்றாகிறான் - என்றும் உள்ள வாக்கியங்களின்படி, மோக்ஷம் பெற்ற நிலையில், அனைத்தும் ஞானத்தால் அறியப்படுவதாகக் கூறப்படுவதால், ஜீவாத்மாவிற்கு அனைத்தையும் அறியும் தகுதி உள்ளது. ஆனால் ஸம்ஸாரத்தில் உள்ளபோது, ஸ்ரீவிபு. (6-7-62) - யயா க்ஷேத்ரஜ்ஞ சக்தி: ஸா வேஷ்டித ந்ருப ஸர்வகா - அவித்யை என்ற சக்தியால் சூழப்பட்டதன் காரணமாகவே ஜீவாத்மா என்ற சக்தியானது (எங்கும் பரவியுள்ள ஸம்ஸார துன்பங்களை அடைந்தபடி உள்ளது) - என்று கூறுவதற்கு ஏற்ப, கர்மங்களின் காரணமாக ஞானமானது சுருக்கம் அடைகிறது; மேலும் ஸ்ரீவிபு. (6-7-63) – தயா திரோஹித்வாத் ச சக்தி: க்ஷேத்ரஜ்ஞ ஸம்ஜ்ஞிதா | ஸர்வபூதேஷு பூபால தாரதம்யேந வர்த்ததே; அப்ராணிமத்ஸு ஸ்வல்பா ஸா ஸ்தாவரேஷு ததோதிகா - மேலும் இந்தச் சக்தியால் (அவித்யை அல்லது கர்மம்) மறைக்கப்பட்டதன் காரணமாகவே ஜீவாத்மாவானது (விலங்குகள், மனிதர்கள் போன்ற) ஏற்றத்தாழ்வு கொண்டதாக ஆகிறது. இது அனைத்து உயிர்களிலும் காணப்படுகிறது; ப்ராணன் இல்லாத சரீரத்தில் இந்தச் சக்தி அற்பமாகவே உள்ளது - என்பதற்கு ஏற்ப, கர்மங்களின் காரணமாக ஞானமானது ஏற்றத்தாழ்வுடன் கூடியதாகவே உள்ளது. மநு. (2-99) – இந்த்ரியாணாம் ஹி ஸர்வேஷாம் யத்யேகம் க்ஷரதீந்த்ரியம், தேநாஸ்ய க்ஷரதி ப்ரஜ்ஞா த்ருதே: பாதாதிவோதகம் - ஒரு குடத்தில் உள்ள நீரானது சிறிய துளை வழியே வெளியேறுவது போன்று மனிதனுடைய ஞானமானது வெளியே செல்கிறது - என்பதற்கு ஏற்ப, ஞானமானது இந்த்ரியங்கள் வழியாக வெளியே சென்று, உலக விஷயங்களைக் குறித்து அறிதல் மற்றும் திரும்புதல் என்பவை நிகழ்கிறது; ஆகவே அப்படிப்பட்ட விரிவடைதல் மற்றும் சுருங்குதல் முதலானவை மூலம் ஏற்படுவதான அறிவை, வெளிப்படுதல் மற்றும் வெளிப்படாமல் இருத்தல் என்பதைக் காரணமாகக் கொண்டு, “பிறந்தது, அழிந்தது” என்று கூறுவதில் தவறில்லை.