Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 63)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

ஆனால், ஜ்ஞாநத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் வாசியென்னென்னில்.

நித்யத்வாதிகளை உபபாதித்து வைதர்ம்யத்தைச் சொல்லுமளவில், அநேக க்ரந்த வ்யவஹிதமாமென்று நினைத்து, ஸாதர்ம்யம் சொன்னவநந்தரம், வைதர்ம்யத்தையும் சொல்லுவதாக, தஜ்ஜிஜ்ஞாஸு ப்ரச்நத்தை உத்க்ஷேபிக்கிறார்.

நித்யமாக உள்ள தன்மை போன்ற ஒவ்வொன்றையும் வரிசையாக எடுத்துக் கூறி, சேராத தர்மங்களைக் கூறும்போது, நூலில் இடைவெளி பலவாக ஏற்படும் என்று எண்ணுகிறார். ஆகவே சேரக்கூடிய தர்மத்தை உரைத்த பின்னர், சேராத தர்மத்தையும் கூறுவதாக, அறிபவர்களுடைய கேள்வியை மனதில் கொண்டவராக அருளிச்செய்கிறார்.

(ஆனால் ஜ்ஞாநத்துக்கும் ஸ்வருபத்துக்கும் வாசி என்? என்னில்) என்று.

ஆனால், “ஞானம் மற்றும் ஸ்வரூபம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?”, என்ற கேள்வியை எழுப்புகிறார்.