Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 62)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

இவர்களுடைய ஜ்ஞாநம்தான் ஸ்வரூபம் போலே நித்யத்ரவ்யமாய், அஜடமாய், ஆநந்த ரூபமாயிருக்கும்.

இப்படி ஜ்ஞாதாவான ஆத்மாவினுடைய ஜ்ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கு முண்டான ஸாதர்ம்ய வைதர்ம்யங்களை அருளிச்செய்கிறார் மேல்; (இவர்களுடைய ஜ்ஞாநம்தான்) என்று தொடங்கி.

இவ்விதம், அறிபவனாகிய ஆத்மாவின் ஞானம் மற்றும் ஸ்வரூபம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ளதான, சேரக்கூடிய தர்மம் மற்றும் சேராத தர்மம் ஆகியவற்றை அடுத்து அருளிச்செய்கிறார்.

– ஸ்வரூபம் போலே நித்யத்ரவ்யமாய், அஜடமாய், ஆநந்த ரூபமாயிருக்கும். இத்தால், நித்யத்வ த்ரவ்யத்வ அஜடத்வ ஆநந்தரூபத்வங்கள், ஸ்வரூபத்தோபாதி, ஜ்ஞாநத்துக்குமுண்டு என்றபடி.

ஆத்மாவின் ஞானமானது, ஸ்வரூபம் போன்றே, “நித்யத்தன்மை கொண்டதாகவும், தானே தங்களை வெளிப்படுத்துவதாகவும், ஆனந்தரூபமாகவும்” உள்ளது. ஆகவே ஸ்வரூபம் போன்றே, நித்யமாக உள்ள தன்மை, தானே தன்னை வெளிப்படுத்தும் தன்மை மற்றும் ஆனந்தமாக உள்ள தன்மை ஆகியவை, ஞானத்திற்கும் உண்டு என்று கருத்து.