Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 60)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஆகையால், ஆத்மபேதம் கொள்ளவேணும்.
கீழ்ச்சொன்னவற்றையெல்லாம் அநுபாஷித்துக் கொண்டு, (ஆகையால் ஆத்மபேதம் கொள்ள வேணும்) என்று நிகமிக்கிறார்.
கீழே உரைத்த பலவற்றையும் ஒன்றாகத் திரட்டியபடி “ஆகவே ஆத்மபேதம் உள்ளதை ஏற்கவேண்டும்” என்று முடிக்கிறா.
– ஆக, கீழ்ச் செய்ததாயிற்று: “சிலர் ஆத்மபேதமில்லை; ஏகாத்மாவே உள்ளதென்றார்கள்” என்று தொடங்கி, இவ்வளவாக, முன்பு தாமருளிச்செய்த ஜீவாநந்த்ய ப்ரதிபடமான ஏகாத்மவாதத்தை உத்க்ஷேபித்து, யுக்தியாலும், சாஸ்த்ரத்தாலும் பஹுமுகமாக அத்தை தூஷித்து, ஆத்மபேதத்தை ஸாதித்தாராயிற்று.
ஆகவே சூர்ணை (49) - சிலர் ஆத்மபேதமில்லை; ஏகாத்மாவே உள்ளதென்றார்கள் - என்று தொடங்கி, கடந்த சூர்ணை முடிய உள்ளவற்றில், முன்பு தான் அருளிச்செய்த, “ஜீவாத்மாக்கள் பலர் உள்ளனர்” என்ற ஸித்தாந்தத்திற்கு எதிர்த்தட்டான “ஆத்மா ஒன்றே” என்ற வாதத்தை உரைத்து, அதனை யுக்தியாலும் சாஸ்த்ரத்தாலும் பலவிதமாக மறுத்து உரைத்து, ஆத்மாக்கள் பலர் உள்ளதை நிரூபித்தார்.