Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 59)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
பரிமாணமும் எடையும், ஆகாரமுமொத்திருக்கிற பொற்குடங்கள், ரத்நங்கள், வ்ரீஹிகள் தொடக்கமானவற்றுக்கு பேதமுண்டாகிறாப்போலே ஸ்வரூபபேதமும் ஸித்தம்.
(பரிமாணமும்) என்று தொடங்கி. அதாவது அளவும், தூக்கமும், வடிவுமொத்திருக்கிற பொற்குடங்கள், ரத்னங்கள், வ்ரீஹிகள் முதலான பதார்த்தங்களுக்கு பேதகமாயிருப்பதொரு லக்ஷணமில்லையேயாகிலும், அதிலே நாநாத்வம் காண்கிறாப் போலே, ஒருபடியாலும் பேதம் சொல்லவொண்ணாதபடி, ஏகாகாரரான முக்தாத்மாக்களுக்கும் ஸ்வரூபபேதம் ஸித்திக்குமென்றபடி.
அளவு, எடை மற்றும் வடிவம் ஆகியவற்றில் ஒரே போன்றுள்ளதான பொற்குடங்கள், இரத்தினங்கள், நெற்கதிர்கள் ஆகியவற்றுக்கு வேறுபட்டிருப்பது என்னும் இலக்கணமானது, “அளவு, எடை” போன்றவற்றால் இல்லை என்றாலும், அவை பலவிதமாக உள்ளதை நாம் உணர்கிறோம். இதே போன்று, எந்தவிதத்திலும் வேறுபாடு கூற முடியாதபடி உள்ள முக்தாத்மாக்களுக்கும் ஸ்வரூபத்தில் வேறுபாடு ஏற்படும்.