Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 58)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
அப்போது தேவ மநுஷ்யாதி பேதமும், காம க்ரோதாதி பேதமும் கழிந்து, ஆத்மாக்கள் ஸ்வரூபம் அத்யந்தம் ஸமமாய், ஒருபடியாலும் பேதம் சொல்லவொண்ணாதபடி இருந்ததேயாகிலும்;
ஆனால், ஆத்மபேத ப்ரதிபத்திக்கு ஹேதுவாய், ஒளபாதிகமாயிருந்துள்ள தேவ மநுஷ்யாதி பேதமும், காமக்ரோதாதி பேதமும் கழிந்து, ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் அத்யந்தம் ஸமமாய், ஒரு ப்ரகாரத்தாலும் பேதகதநத்துக்கு யோக்யதையில்லாதபடியிறே மோக்ஷ தசையிருப்பது; அவ்விடத்தில், ஆத்மபேதம் ஸித்திக்கிறபடி எங்ஙனே? என்கிற வாதி ப்ரச்நத்தை அநுவதிக்கிறார் (அப்போது) என்று தொடங்கி.
ஆனால், ஆத்மபேதத்தை அறிவதற்குக் காரணமாக உள்ளதும், இயல்பாகவே அல்லாமல் வந்து சேர்ந்ததும் ஆகிய “தேவர்கள், மனிதர்கள் என்பது போன்ற வேறுபாடுகளும், “ஆசை கோபம் என்பது போன்ற வேறுபாடுகளும் கூறுவதற்கு இயலாதபடி உள்ளதாகவும் அல்லவோ மோக்ஷ நிலை உள்ளது? அங்கு ஆத்ம வேறுபாடுகள் எவ்விதம் வெளிப்படுகின்றன என்ற எதிர்வாதத்திற்குச் சமாதானம் கூறுகிறார்.
(ஒருபடியாலும் பேதம் சொல்லவொண்ணாதபடி யிருந்ததேயாகிலும்) என்று த்ருஷ்டாந்தமுகேந பேதத்தை ஸாதிக்கிறார்.
“ஒருபடியாலும் பேதம் சொல்லவொண்ணாதபடியிருந்ததேயாகிலும்” என்று , “மோக்ஷ நிலையில் எந்தவிதத்திலும் வேறுபாடு கூற இயலாதபடி உள்ளது என்றாலும்” என உரைக்கிறார். ஓர் உதாரணம் மூலம் அங்கும் ஆத்மவேறுபாடுகள் உள்ளதைக் கூறுகிறார்.