Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 56)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ச்ருதி, ஔபாதிக பேதத்தைச் சொல்லுகிறதென்னவொண்ணாது.
இந்த ச்ருதி ஆத்மபேதத்தைச் சொல்லுகிறதென்னில், “போக்தா போக்யம்” என்றும், “ப்ருதகாத்மாநம்” என்றும், “ஜ்ஞாஜ்ஞௌ த்வாவஜௌ” என்றும், “அந்யோந்தர ஆத்மா விஜ்ஞாநமய:” என்றும் ஜீவைகத்வ ப்ரதிபாதிகைகளான அநேக ச்ருதிகளோடும் விரோதிக்கும். ஆகையால், இது ஒளபாதிக பேதத்தைச் சொல்லுகிறதென்றிறே அவர்கள் சொல்லுவது. அத்தை நிஷேதிக்கிறார். – ஒளபாதிக பேதமென்னவொண்ணாமைக்கு ஹேதுவை அருளிச்செய்கிறார்.
மேலே கூறிய ச்ருதி வாக்கியமானது ஆத்மாக்களில் உள்ள பேதத்தைக் கூறுகிறது என்று கொண்டால், போக்தா போக்யம் – அனுபவிக்கும் சேதநம், அனுபவிக்கப்படும் அசேதநநம் – என்றும், ச்வே. (1-6) – ப்ருதக் ஆத்மாநம் – ஆத்மாவையும், அதனை நியமிப்பவனையும் தனித்தனியாக - என்றும், ச்வே. (1-9) - ஜ்ஞா ஜ்ஞௌ த்வௌ அஜௌ – பிறப்பற்ற இந்த இருவரில் ஒருவன் அறிந்தவன், ஒருவன் அறியாதவன் - என்றும், தைத். (2-4-1) - அந்யோந்தர ஆத்மா விஜ்ஞாநமய: - மனோமயனைக் காட்டிலும் வேறான ஞானமயமாக உள்ளவனும், உள்ளே காணப்படுபவனும் ஆகிய ஆத்மா வேறாக உள்ளான் - என்றும், ஜீவாத்மாக்களின் ஐக்யத்தை உரைக்கும் பல ச்ருதி வாக்கியங்களுடன், மேலே கூறப்பட்ட வாக்கியமானது, முரண்பாடு அடையும். ஆகவே மேலே கூறப்பட்ட வாக்கியமானது ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் ஏற்படும் பேதத்தைக் கூறுகிறது என்றே கொள்ளவேண்டும்; இவ்விதமாக அத்வைதிகள் கூறுகிறார்கள். இதனை மறுக்கிறார். ஔபாதிக பேதத்தை அந்த ச்ருதி வாக்கியம் கூறுகிறது என்று கொள்ளக் கூடாது என்பதற்கான வேறு ஒரு காரணத்தையும் அருளிச்செய்கிறார்.
(ச்ருதி, ஒளபாதிக பேதத்தைச் சொல்லுகிறதென்னவொண்ணாது) என்று. ஒளபாதிக பேதமாவது, தேவ மநுஷ்யாதி பேதமும் காமக்ரோதாதி பேதமும்.
“ஔபாதிக பேதம்” என்றால், “தேவர்கள், மனிதர்கள்” மற்றும் “ஆசை, சினம்” என்பது போன்ற வேறுபாடுகள் ஆகும்.