Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 54)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

விஷம ஸ்ருஷ்டியும் கூடாது.

இன்னமும் ஓர் அநுபபத்தி சொல்லுகிறார்.

மேலும் ஒரு பொருந்தாமையையும் கூறுகிறார்.

(விஷம ஸ்ருஷ்டியும் கூடாது) என்று. அதாவது, ஏகாத்மாவாகில் தேவதிர்யகாதி ரூபேண, சில ஸுகோத்தரமாகவும் சில துக்கோத்தரமாகவும், சில ஸுகதுக்க மிச்ரமாகவும், இப்படி லோகத்தில பதார்த்தங்களை விஷமமாக ஸர்வேச்வரன் ஸ்ருஷ்டிக்கக் கூடாதென்கை. ஜீவபேதமும் கர்ம தாரதம்யமுமிறே விஷம ஸ்ருஷ்டிக்கு ஹேது.

“ஒரே ஆத்மா மட்டுமே உள்ளான்” என்று உரைத்தால், “தேவர்கள், விலங்கு” என்பது போன்ற வடிவங்களிலும், அவற்றுள் சில சுகமாகவும், சில இன்பமாகவும், சில இன்ப துன்பங்கள் கலந்தவையாகவும், இவ்விதம் லோகத்தில் ஏற்றத்தாழ்வுகளுடன் ஸர்வேச்வரன் ஸ்ருஷ்டித்தல் என்பது ஏற்படாது. ஜீவாத்மாக்களுடைய கர்மங்களில் உள்ள ஏற்றதாழ்வுகளும், ஜீவாத்மாக்களில் உள்ள வேறுபாடுகளும் அல்லவோ இவ்விதமாக ஸர்வேச்வரன் ஸ்ருஷ்டிப்பதற்குக் காரணமாக அமைகிறது?