Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 52)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஸௌபரி சரீரத்திலும் அது காணவேணும்.
அதுக்கு அநுபபத்தி சொல்லுகிறார்.
அந்த வாதத்தில் உள்ள பொருந்தம் இன்மையை அடுத்து உரைக்கிறார்.
(ஸௌபரி சரீரத்திலும் அது காணவேணும்) என்று. அதாவது, தேஹபேதம் ஸுகதுக்க நியமத்துக்கு ஹேதுவாகில், அநேக தேஹ பரிக்ரஹம் பணணின ஸௌபரி சரீரத்திலும் அந்த நியமம் காணவேணுமென்கை. தேஹபேதம், ஸுகதுக்க நியமத்துக்கு ஹேதுவன்றாகில், ஜந்மாந்தராநுபவத்தை இஜ்ஜந்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ? என்னில், ஸ்மரியாதொழிகிறது ஸம்ஸ்காரத்தினுடைய அநுத்பவத்தாலேயாதல், நாசத்தாலேயாதல். சரீராந்தரத்தில் ஸுகதுக்க ஸ்மருத்யாதிக ளின்றிக்கே ஒழிகிறதும் இரண்டத்தொன்றாலே யென்னில், ஒரு சரீரந்தன்னிலும் ஸ்ம்ருதி கூடாதொழியவேணும். ஆகையால் ஸுகதுக்க நியமத்துக்கு ஹேது, தேஹபேதம் என்னவொண்ணாது.
சரீரங்களில் உள்ள வேறுபாடுகளே, சுகம் மற்றும் துக்கம் ஆகிய வேறுபாடுகளுக்கும் காரணம் என்று கொண்டால், பல சரீரங்கள் எடுத்த ஸௌபரி முனிவரின் சரீரத்திலும் அந்த விதிமுறையை நாம் காணவேண்டும் அல்லவோ? சரீரங்களில் உள்ள வேறுபாடுகள், சுகம் மற்றும் துக்கம் ஏற்படுவதற்கான காரணம் அல்ல என்றால், கடந்த பிறவிகளில் அனுபவித்த சுகம் மற்றும் துக்கங்கள் இந்தப் பிறவியிலும் நினைவிற்கு வரவேண்டும் அல்லவோ என்று கேட்கலாம். இதற்கு விடை அளிக்கிறார். இவ்விதம் நினைவில் வராமல் இருப்பதற்குக் காரணம், ஞானமானது மறைக்கப்பட்டு ஸம்ஸாரம் வெளிப்படாமல் இருத்தல் அல்லது அதன் அழிவு காரணமாக அதில் அல்லது வேறு சரீரத்தில் சுகதுக்கங்களின் ஞாபகம் இன்றிப்போதல் ஆகிய இரண்டில் ஒன்று என்றால், ஒரு சரீரத்திலும் நினைவுகள் ஏற்படாமல் இருத்தல் வேண்டும். ஆகவே சுகதுக்கங்களுக்கான காரணம் சரீரத்தில் உள்ள வேற்றுமை என்று கூறுதல் பொருந்தாது.