Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 51)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

அது தேஹ பேதத்தாலே என்னில்.

அந்த ஸுகதுக்க வ்யவஸ்தைக்கு ஹேது “தேஹ பேதம்” என்கிறவர்களுக்தியை அநுவதிக்கிறார் (அது தேஹபேதத்தாலே என்னில்) என்று.

“அத்தகைய சுகம் மற்றும் துக்கம் ஆகிய வேறுபாடுகளுக்குக் காரணம், சரீரங்கள் பலவாக உள்ளன என்பதே ஆகும்”, என்று சிலர் கூறுகிறார்கள். அந்த வாதத்தை இவர் எடுத்துக் கூறுகிறார்.