Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 48)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

இம்மூன்றும் தனித்தனியே அநந்தமாயிருக்கும்.

இப்படி உக்தமான த்ரிவிதாத்ம வர்க்கமும், இத்தனை சேதநரென்று ஸங்க்யேயமாயிருக்குமோ? என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார்.

இவ்விதம் கூறப்பட மூன்றுவிதமான ஆத்மாக்களும் “இத்தனை” என்று அளவிட்டுக் கூறலாம்படி உள்ளதோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(இம்மூன்றும் தனித்தனியே அநந்தமாயிருக்கும்) என்று. இம்மூன்றும் அநந்தமாயிருக்குமென்றால், வர்க்கத்ரயமுமாக அநந்தமென்று தோற்றுமென்று நினைத்து, “தனித்தனியே” என்று விசேஷிக்கிறார். அநந்தமாயிருக்குமென்றது அஸங்க்யேயமாயிருக்குமென்றபடி.

“இந்த மூன்றும் எண்ணற்றதாக உள்ளது” என்று கூறினால், “மூன்று பிரிவும் எண்ணற்றதாக உள்ளன” என்ற கருத்து உண்டாகிவிடும் என எண்ணியவராக, “தனித்தனியே” என்று சிறப்பித்துக் கூறுகிறார். “அந்தந்தமாக” என்றால் “எண்ணற்று” என்று பொருள்.