Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 43)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

பத்தரென்கிறது ஸம்ஸாரிகளை.

இதில் பத்தரென்கிறது ஆரை? என்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செயகிறார்.

இவர்களில், பத்தர் என்பது யாரைக் குறிக்கும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(பத்தரென்கிறது ஸம்ஸாரிகளை) என்று. அவர்களாகிறார் - தில தைலவத் தாரு வஹ்நிவத் துர்விவேசகுணத்ரயாத் மகாநாதி பகவந் மாயா திரோஹித ஸ்வஸ்வரூபராய், அநாத்யவித்யா ஸஞ்சிதாநந்த புண்யபாபரூப கர்மவேஷ்டிதராய், தத்தத்கர்மாநுகுண விவித விசிதர தேவாதி ரூப தேஹ விசேஷ ப்ரவிஷ்டராய், அவ்வோ தேஹங்களிலே அஹம் புத்தியையும், தேஹாநுபந்திகளிலே மமதா புததியையும் பண்ணி, துர்வாஸநாருசி விவசராய், ஸ்வஸ்வ கர்மாநுகுண ஸுகதுக்க பரம்பரைகளை அநுபவிக்குமவர்கள்.

ஸம்ஸாரிகள் யார் என்றால், எள்ளுக்குள் மறைந்துள்ள எண்ணெய் போன்றும், மரத்திற்குள் மறைந்துள்ள அக்னி போன்றும் பிரிக்க இயலாமல், மூன்று குணங்கள் கொண்டதான அசித்தின் ஸம்பந்தம் காரணமாக எல்லையற்ற காலங்கள் பகவானுடைய மாயை என்று திரையால் தங்களுடைய ஸ்வரூபம் மறைக்கப்ட்டவர்கள்; எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ளதான அவித்யையின் ஸம்பந்தம் காரணமாகப் பலவிதமான புண்யபாப ரூபங்களுடைய பலன்களுக்கு ஏற்றபடி பலவிதமான விசித்ரமான தேவர்கள் முதலான வடிவங்கள் எடுத்தபடி உள்ளவர்கள்; அந்தந்த சரீரங்களில் “இந்தச் சரீரமே நான் ஆவேன்” என்று எண்ணியபடியும், “சரீரத்துடன் தொடர்புடைய அனைத்தும் என்னுடையது” என்று எண்ணியபடியும் உள்ளவர்கள்; தகாத விஷயங்களில் ருசி கொண்டபடி உள்ளவர்கள்; தங்கள் தங்கள் கர்மங்களுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிப்பவர்கள் ஆவார்கள்.