Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 42)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

ஆத்மஸ்வரூபம்தான் பத்த முக்த நித்யரூபேண மூன்று படிப்பட்டிருக்கும்.

இனி ஏவம்பூதமான ஆத்மஸ்வரூபம், அநாத்யசித் ஸமபந்த தத்வியோக தத்தநந்வயங்களாலே பத்த முக்த நித்யரூபேண த்ரிப்ரகாரமாயிருக்கும்படியை அருளிச்செயகிறார் (ஆத்மஸ்வரூபம்தான் பத்த முக்த நித்யரூபேண மூன்று படிப்பட்டிருக்கும்) என்று.

அடுத்து, இப்படிப்பட்டதான ஆத்மஸ்வரூபமானது, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ள அசித் வஸ்துக்களுடைய ஸம்பந்தம், அவற்றிலிருந்து விடுபடுதல், அசித்தின் ஸம்பந்தம் இல்லாமை போன்ற பல காரணங்களால், “பத்தர், முத்தர், நித்யர்” என மூன்றுவிதமாக உள்ள நிலையை அருளிச்செய்கிறார்.