Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 36)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஜ்நாநாச்ரயமாகில் சாஸ்த்ரங்களிலே இவனை ஜ்ஞாநமென்று சொல்லுவானேன்? என்னில்;
– “ஜ்நாநாச்ரயமாகில் சாஸ்த்ரங்களிலே இவனை ஜ்ஞாநமென்று சொல்லுவானேன்? என்னில்” என்று,
அந்தக் கேள்வியானது, “ஆத்மாவானது ஞானத்தின் இருப்பிடம் என்றால், சாஸ்த்ரங்களில் ஆத்மாவை ஞானம் என்று ஏன் கூறவேண்டும்?”, என்பதாகும்.