Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 34)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
குண ஸம்ஸர்க்க க்ருதம்.
– ஆனால், அதுதான் இவனுக்கு வந்தபடியென்? என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார்.
ஆனால், கடந்த சூர்ணையில் கூறப்பட்டதான “செயலாற்றுதல்” போன்றவை ஆத்மாவிற்கு எவ்விதம் வந்து சேர்ந்தன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
(குணஸம்ஸர்க்க க்ருதம்) என்று குணங்களாகிறன ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் அவற்றினுடைய ஸம்ஸர்க்ததாலே உணடானதென்றபடி. “ப்ரக்ருதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வச: அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே” என்னக் கடவதிறே. இதெல்லாம் “கர்தா சாஸ்த்ரார்த்தவர்த்தவத்வாத்” என்கிற ஸூத்ரத்திலே பூர்வபக்ஷ ஸித்தாந்த ரூபேண பாஷ்யகாரர் தாமே விஸ்தரேண அருளிச் செய்தார்.
குணங்கள் என்பவை ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்பவை ஆகும். அவற்றினுடைய சேர்க்கை காரணமாகவே ஆத்மாவிற்கு இந்த நிலை ஏற்படுகிறது. கீதையில் (3-27) - ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வச: | அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹம் இதி மந்யதே - அனைத்து செயல்களும் அனைத்துவிதங்களிலும் ப்ரக்ருதியின் குணங்களால் செயல்படுகின்றன. ஆனால் அஹங்காரத்தால் மூடப்பட்ட அறிவு கொண்ட ஒருவன் “நான் கர்த்தா ஆவேன்” என்று எண்ணுகிறான் - என்றது காண்க. இவை அனைத்தையும் ப்ரஹ்மஸூத்ரம் (2-3-33) - கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்வாத் - சாஸ்த்ரம் பயனுள்ளது என்றாகவேண்டும் என்றால், ஜீவாத்மா கர்த்தாவாகிறான் – என்ற ஸூத்ரத்தில் பூர்வபக்ஷம் மற்றும் ஸித்தாந்த வடிவத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் மிகவும் விரிவாக அருளிச்செய்துள்ளார்.