Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 33)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

ஸாம்ஸாரிக ப்ரவருத்திகளில் கர்த்ருத்வம் ஸ்வரூப ப்ரயுக்தமன்று.

ஆனால் கர்த்ருத்வமெல்லாம் இவனுக்கு ஸ்வரூப ப்ரயுக்தமாமோ? என்கிற சங்கையிலே அருளிச்செயகிறார்.

ஆனால் செயலாற்றுதல் என்பது ஆத்மாவிற்கு இயல்பானதாகுமோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

(ஸாம்ஸாரிக ப்ரவருத்திகளில் கர்த்ருத்வம் ஸ்வரூப ப்ரயுக்தமன்று) என்று. ஸாம்ஸாரிக ப்ரவருத்திகளாவன ஸ்த்ரீ அந்ந பாநாதி போகங்களை யுத்தேசித்துப் பண்ணும் ஸ்வ வ்யாபாரங்கள். அவற்றில் கர்த்ருத்வம் ஔபாதிகமாகையாலே  ஸ்வரூப ப்ரயுக்தமன்றென்கை.

அத்தகைய கர்த்ருத்வமானது ஸம்ஸாரத்தில் இயல்பானது அல்ல. ஸம்ஸாரத்தில் உள்ளபோது உண்டாகும் செயல்பாடுகள் என்பவை பெண்கள், உணவு, நீர் போன்றவற்றை அனுபவிக்கும் பொருட்டு செய்கின்ற செயல்கள் ஆகும். அவற்றில் ஏற்படும் செயல்பாடுகள் என்பவை வந்தேறியவை என்பதால் இயல்பானவை அல்ல.