Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 29)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஜ்ஞாதாவென்றபோதே கர்த்தா போக்தா என்னுமிடம் சொல்லிற்றாயிற்று.
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் மூன்றும் சொல்ல வேண்டியிருக்க, “ஜ்ஞாநாச்ரயமாய்” என்று, ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தைச் சொல்லி, மற்றையவை இங்குச் சொல்லாதொழிவானென்? என்கிற சங்கையிலே அருளிச் செயகிறார், (ஜ்ஞாதாவென்றபோதே கர்த்தா போக்தா என்னுமிடம சொல்லிற்றாயிற்று) என்று.
ஆத்மாவிற்கு “அறிபவனாக இருத்தல், செயல் புரிபவனாக இருத்தல், அனுபவிப்பனாக இருத்தல்” ஆகிய மூன்றையும் கூறவேண்டும். இவ்விதம் உள்ளபோது, “ஞானத்திற்கு இருப்பிடமாக” என்று “அறிபவனாக உள்ள தன்மை” என்பதை மட்டும் ஏன் கூறவேண்டும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். அதாவது “அறிபவன்” என்று கூறியபோதே, “செயலாற்றுபவன், அனுபவிப்பவன்” ஆகிய இரண்டுமே கூறப்பட்டதாகிறது என்கிறார்.