Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 27)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஆத்மா ஜ்ஞாநத்துக்கிருப்பிடமன்றிக்கே ஜ்ஞாநமாத்ரமாகில்;
ஏவம்பூதமான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தை இசையாதே ஜ்ஞாந மாத்ரமென்று சொல்லுகிற பௌத்தாதிகளுடைய மதத்தை நிராகரிக்கைக்காக தத்தத் பக்ஷத்தை அநுவதிக்கிறார்.
இப்படிப்பட்ட தன்மை கொண்டதாகிய ஆத்மாவானது ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ளது என்பதை ஏற்காமல், “ஞானம் மட்டுமே ஆகும்” என்று பௌத்தர்கள் போன்றவர்கள் கூறுகிறார்கள். அந்த மதத்தை நிராகரிப்பதற்காக, அவர்களுடைய கருத்தை கூறுகிறார்.
(ஆத்மா, ஜ்ஞாநத்துக்கு இருப்பிடமன்றிக்கே ஜ்ஞாந மாத்ரமாகில்) என்று.
“ஞானம் என்பதற்கு இருப்பிடமாக ஆத்மா இல்லை; மாறாக ஆத்மாவானது ஞானம் மட்டுமே ஆகும்”, என்று கூறினால் ... (அடுத்த சூர்ணை காண்க).