Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 21)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
நிர்விகாரமாகையாவது அசித்துப்போலே விகரிக்கையின்றிக்கே ஒருபடிப்பட்டிருக்கை.
– அதாவது “அம்ருதாக்ஷரம் ஹர:”, “ஆத்மா சுத்தோக்ஷர:” என்று, அக்ஷர சப்தவாச்யமான வஸ்துவாகையாலே, க்ஷணக்ஷரண ஸ்வபாவமாகையாலே க்ஷர சப்தவாச்யமான அசித்துப்போலே விகரிக்கையின்றிக்கே ஸதைக ரூபமாயிருக்கை. ஆகையிறே “அவிகார்யோயம்” என்று கீதோபநிஷதாசார்யன் அருளிச்செய்தது.
அதாவது, ச்வே. (1-10) – அம்ருதாக்ஷரம் ஹர: - மரணம் அற்றவன், அழிவற்றவன், மாற்றம் அற்றவன் - என்றும், ஸ்ரீவராஹபுராணம் (2-13-17) – ஆத்மா சுத்தோக்ஷர: - ஆத்மா தூய்மையானவன், மாற்றம் அற்றவன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப ஆத்வானவன் “அக்ஷரம்” என்ற சொல் முலம் கூறப்படுகிறான். ஆனால் அசித்தானது ஒவ்வொரு நொடியிலும் மாறியபடி உள்ளதால் “க்ஷரம்” என்ற சொல்லால் கூறப்படுகிறது. இவ்விதம் உள்ள அசித் போன்று மாற்றம் அடையாதவனாக ஆத்மா உள்ளதால், அவன் எப்போதும் ஒரே போன்று உள்ளான். இதனால்தான் கீதையில் (2-25) - அவிகார்யோயம் - ஆத்மா மாறுபாடு அடையாதவன் - என்று கீதாசார்யன் கூறினான்.