Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 20)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

நிரவயவமாகையாவது, அவயவ ஸமுதாயமன்றிக்கேயிருக்கை.

– அதாவது, “விஜ்ஞாநமய:” என்றும், “விஜ்ஞாநகந:” என்றும் சொல்லுகிறபடியே, ஜ்ஞாநைகாரமாகையாலே அசித் வஸ்துக்களைப் போலே அவயவ ஸங்காதாத்மகமன்றிக்கேயிருக்கை.

தை. (4-1) - விந்ஞாநமய: - ஞானமயமாக உள்ளவன் – என்றும், ப்ரு. (4-4-12) - விஞ்ஞாநகத: - ஞானமே ரூபமாக உள்ளான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஆத்மா ஞானத்தையே தனது வடிவமாகக் கொண்டுள்ளதால், அசித் பொருள்கள் போன்று அவயவங்களுடைய கூட்டமாக இல்லாமல் உள்ளது.