Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 16)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
மணி த்யுமணி தீபாதிகள் ஓரிடத்திலேயிருக்க ப்ரபை எங்குமொக்க வ்யாபிக்குமாபோலே ஜ்ஞாநம் எங்குமொக்க வ்யாபிக்கையாலே அவற்றை புஜிக்கத் தட்டில்லை.
அதுக்கு உததரமருளிச் செய்கிறார் (மணி த்யுமணி) என்று தொடங்கி.
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, மணி த்யுமணி தீபாதிகளாகிற ப்ரபாவத் பதார்த்தங்கள் ஏகதேசஸ்தங்களாயிருக்கச் செய்தேயும் தத் ப்ரபை சுற்றெங்கும் வ்யாபிக்கிறாப் போலே, ஆத்மா ஹ்ருதய ப்ரதேசத்திலேயிருக்கச் செய்தே, தத் தர்மமான ஜ்ஞாநம் எங்குமொக்க வ்யாபிக்கையாலே சரீரமெங்குமொக்க ஸுகதுக்கங்களை புஜிக்கைக்கொரு ப்ரதிஹதியில்லையென்கை. இதுதான் “குணாத்வாலோகவத்” என்கிற ஸூத்ரார்த்தம்; “வாசப்தோ மதாந்தர வ்யாவ்ருத்த்யர்த்த:; ஆத்மா, ஸ்வகுணேந ஜ்ஞாநேந ஸகல தேஹம் வ்யாப்ய அவஸ்திதம், ஆலோகவத் யதா மணி த்யுமணி ப்ரப்ருதீ நாம ஏக தேசவர்த்திநாம் ஆலோக: அநேக தேசவ்யாபீ த்ருச்யதே தத்வத் ஹ்ருதயஸ்தஸ்யாத் மநோ ஜ்ஞாநம் ஸகலதேஹம் வ்யாப்ய வர்த்ததே. ஜ்ஞாது: ப்ரபா ஸ்தாநீயஸ்ய ஜ்ஞாநஸ்ய ஸ்வாச்ரயாத் அந்யத்ர வ்ருத்திர் மணிப்ரபாவத் உபபத்யத இதி ப்ரதம ஸூத்ரே ஸ்தாபிதம்” என்றிறே இதுக்கு பாஷ்யம். இப்படி ஜ்ஞாந வ்யாப்தியாலே ஸர்வத்தையும் புஜிக்குமென்னுமிடம் ப்ருஹதாரண்யகத்திலே சொல்லப்பட்டது. “ப்ரஜ்ஞயா வாசம் ஸமாருஹ்ய வாசா ஸர்வாணி நாமாந்யாப்நோதி, ப்ரஜ்ஞயாக்ராணம் ஸமாருஹ்ய க்ராணேந ஸர்வாந் கந்தாநாப்நோதி, ப்ரஜ்ஞயா சக்ஷுஸ் ஸமாருஹ்ய சக்ஷுஷா ஸர்வாணி ரூபாண்யாப்நோதி, ப்ரஜ்ஞயா ச்ரோத்ரம் ஸமாருஹ்ய ச்ரோத்ரேண ஸர்வாஞ்சப்தாநாப்நோதி, ப்ரஜ்ஞயா ஜிஹ்வாம் ஸமாருஹ்ய ஜிஹ்வயா ஸர்வாந் ரஸாநாபநோதி, ப்ரஜ்ஞயா ஹஸ்தௌ ஸமாருஹ்ய ஹஸ்தாப்யாம் ஸர்வாணி கர்மாண்யாப்நோதி, ப்ரஜ்ஞயா சரீரம் ஸமாருஹ்ய சரீரேண ஸுகதுக்கே ஆப்நோதி, ப்ரஜ்ஞயோபஸ்தம் ஸமாருஹ்ய உபஸ்தேநாநநதம் ரதிம் ப்ரஜாம் சாப்நோதி, ப்ரஜ்ஞயா பாதௌ ஸமாருஹ்ய பாதாப்யாம் ஸர்வா கதீராப்நோதி, ப்ரஜ்ஞயா தியம் ஸமாருஹ்ய தியா விஜ்ஞாதவ்யம் காமமாப்நோதி” என்றிப்படி சொல்லுகையாலே.
அதாவது இரத்தினக்கல், சூரியன், தீபம் என்பது போன்று ஒளி வீசும் பொருள்கள் பலவும் அவை அவை ஒரு இடத்தில் உள்ளபோதிலும், அவற்றின் ஒளியானது அவற்றைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்திலும் பரவுகின்றன. இது போன்றே ஆத்மாவானது சரீரத்தின் இதயத்தில் மட்டுமே உள்ளபோதிலும், அதன் தர்மமாகிய ஞானம் என்பது அனைத்து இடங்களிலும் பரவியுள்ளதால், சரீரத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் சுக துக்கங்களை அனுபவித்தல் என்பதில் குறையில்லை. இதுவே ப்ர.ஸூ. (2-3-26) - குணாத்வா ஆலோகவத் - கிரணங்கள் போன்று தனது குணத்தினால் பரவுகிறான் - என்ற ஸூத்ரத்தின் பொருளாகும். இதற்கான ஸ்ரீபாஷ்யம், “ஸூத்திரத்தில் உள்ள “வா” என்ற சொல்லானது, மற்ற கருத்துக்களைத் தள்ளுகிறது. ஆத்மாவானது தன்னுடைய ஞானம் என்ற குணத்தால் (இது தர்மபூத ஞானம் எனப்படும்) அனைத்து சரீரங்களிலும் பரவி நிற்கிறது (குறிப்பு – ஸ்ரீபாஷ்யத்தில் “ஸகலதேஹம்” என்றுள்ளது. இது “அனைத்து சரீரங்கள்” என்றும், “சரீரத்தில் அனைத்து இடங்கள்” என்றும் இரு பொருள் தரலாம்). ஆகவே, ஆலோகவத் – ஒளியைப் போன்று ஆகும். இரத்தினம், சூரியன் போன்றவை ஓரிடத்தில் மட்டுமே உள்ளபோதிலும், அவற்றின் ப்ரகாசம் என்பது, எங்கும் பரவி நிற்பதைக் காணலாம். இதே போன்று இதயத்தில் மட்டுமே ஆத்மா உள்ளபோதிலும், அதன் ஞானம் என்பது சரீரம் முழுவதும் பரவி நிற்கிறது. ஒளியுடன் கூடிய இரத்தினத்தின் ஒளி போன்று, அறிபவனாக உள்ள ஆத்மாவின் ஞானம் என்பது, தனது ஆதாரமான (இருப்பிடமான) ஆத்மாவையும் கடந்து ப்ரகாசிக்கும் என்பதை நாம் முதல் ஸூத்ரத்திலேயே கூறினோம்” என்பதாகும். இப்படியாக ஞானமானது சரீரம் எங்கும் பரவி நிற்பதால், ஆத்மாவானது அனைத்தையும் அனுபவிக்கிறது என்று ப்ருஹத் உபநிஷத்தில் கூறப்பட்டது. மேலும் கௌஷீதகீ உபநிஷத் – ப்ரஜ்ஞயா ... காமமாப்நோதி – ஞானம் மூலம் வாக்கை அடைந்து அனைத்து பெயர்களுடன் ஸம்பந்தம் அடைகிறான்; ஞானம் மூலம் மூக்கை அடைந்து அனைத்து மணங்களையும் அனுபவிக்கிறான்; ஞானம் மூலம் செவியை அடைந்து அனைத்து ஓசைகளையும் கேட்கிறான்; ஞானம் மூலம் நாக்கை அடைந்து அனைத்து சுவைகளையும் உணர்கிறான்; ஞானத்தால் கைகளை அடைந்து அனைத்து செயல்களையும் செய்கிறான்; ஞானத்தால் சரீரத்தை அடைந்து இன்பதுன்பங்களை அனுபவிக்கிறான்; ஞானத்தால் ஆண்குறியை அடைந்து மக்களைப் பெறுகிறான்; ஞானத்தால் கால்களை அடைந்து வேண்டிய இடங்களுக்குச் செல்கிறான்; ஞானத்தால் புத்தியை அடைந்து தனது விருப்பங்களை அடைகிறான் - என்று கூறியது காண்க.