Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 15)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
அணுவாய், ஹ்ருதயத்தளவிலே நிற்குமாகில் சரீரமெங்குமொக்க ஸுகதுக்கங்களை புஜிக்கிறபடியென்னென்னில்.
இப்படியிருக்குமாகில் ஸர்வ சரீர வ்யாபியான ஸுகதுக்காநுபவம் கூடும்படியெங்ஙனே யென்கிற சங்கையை யநுவதிக்கிறார் (அணுவாய்) என்று தொடங்கி.
இவ்விதம் உள்ளபோது, சரீரம் முழுவதும் பரவி நிற்கும் சுகம் மற்றும் துக்கத்தை ஆத்மா அனுபவிப்பது என்பது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது அணுபரிமாணமாய் ஹ்ருதய ப்ரதேசமாத்ரத்திலே நின்று விடுமாகில் “பாதே மே வேதநா சிரஸி மே வேதநா, பாதே மே ஸுகம் சிரஸி மே ஸுகம்” என்று ஆபாதசூடம் சரீரமெங்குமொக்க ஸுகதுக்கங்களை புஜிக்கிறபடி யெங்ஙனே யென்னில் என்கை.
அணு அளவேயாக இருந்து, இதயத்தில் மட்டுமே நின்றுவிடுகிறது என்றால், “பாதே மே வேதநா சிரஸி மே வேதநா, பாதே மே ஸுகம் சிரஸி மே ஸுகம் – எனது கால்கள் வலிக்கிறது, எனது தலை வலிக்கிறது. எனது கால்கள் ஸுகமாக உள்ளன, எனது தலை ஸுகமாக உள்ளது” என்பதற்கு ஏற்ப, கால் தொடங்கி தலை முடிய உள்ள சுகதுக்கங்களை நாம் உணர்வது எப்படிப் பொருந்துகிறது என்ற கேள்வி எழுகிறது.