Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 14)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

ஹ்ருதய ப்ரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்துப் போவது வருவதாமென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே, ஆத்மா அணுவாகக் கடவது.

– அதுக்கு உத்தரமருளிச் செய்கிறார் (ஹ்ருதய ப்ரதேசத்தில் நின்றுமென்று தொடங்கி).

அதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “ஹ்ருதிஹ்யேவாயமாத்மா” என்று ஹ்ருதய ஸ்திதியையும், “தேந ப்ரத்யோதேநைஷ ஆத்மா நிஷ்க்ராமதி சக்ஷுஷோவா மூர்த்நோவா அந்யேப்யோவா சரீர தேசேப்ய:” என்று உத்க்ரமணத்தையும், “யே வை கேசாஸ்மால் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமஸமேவ தே ஸர்வே கச்சந்தி” என்று கமநத்தையும், “தஸ்மால் லோகாத் புநரேத்யஸ்மை லோகாய கர்மணே” என்று ஆகமநத்தையும், நிர்தோஷ ப்ரமாணமான வேதாந்த சாஸ்தரம் சொலலுகையாலே அணுவாகக் கடவதென்கை. விபுவாகில் இவையொன்றும் கூடாதிறே. ஸூத்ரகாரருமாத்மாவினுடைய வணுத்வம் ஸாதிக்கிறவளவில், “உத்க்ராந்தி கத்யாகதீநாம்” என்று இவற்றாலேயிறே முந்துற ஸாதித்தது. “ஏஷோணுராதமா சேதஸா வேதிதவ்ய:”, “வாலாக்ர சதபாகஸ்ய ச ததா கல்பிதஸ்ய ச, பாகோ ஜீவஸ்ஸ விஜ்ஞேய:”, “ஆராக்ர மாத்ரோ ஹ்யவரோபி த்ருஷ்ட” “ஸ்வரூபமணுமாத்ரம் ஸ்யாத் ஜ்ஞாநாநந்தைக லக்ஷணம், த்ரஸரேணு ப்ரமாணாஸ்தே ரச்மி கோடி விபூஷிதா” இத்யாதி ச்ருதி ஸ்ம்ருதிகளாலும் ஆத்மாவினுடைய அணுத்வம் ஸம்ப்ரதிபந்நம்.

ப்ர. (3-6) - ஹ்ருதி ஹி அயமாத்மா – இதயத்தில் ஆத்மா உள்ளது - என்று ஆத்மாவின் இருப்பு என்பதை இதயத்தில் உள்ளதாக உரைத்து, ப்ரு. (4-4-2) – தேந ப்ரத்யோதேந ஏஷ ஆத்மா நிஷ்க்ராமதி சக்ஷுஷோ வா மூர்த்நோ வா அந்யேப்யோ வா சரீர தேசேப்ய: - இறக்கும்போது இதயத்தின் உட்பகுதியில் உண்டாகும் ஒளியின் உதவியுடன் இந்த ஆத்மா கண் மூலமாகவோ, தலை வழியாகவோ, அல்லது சரீரத்தின் மற்ற பகுதிகள் வழியாகவோ வெளியே கிளம்புகிறான் - என்பதாக ஆத்மா வெளிக்கிளம்புவதை உரைத்து, கௌஷீ. (1-2) – யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமஸம் ஏவ தே ஸர்வே கச்சந்தி – இங்ருந்து புறப்படும் அனைத்து ஆத்மாக்களும் சந்த்ரமண்டலத்தையே அடைகின்றன - என்று ஆத்மா மேலே செல்வதையும், ப்ரு. (4-4-6) - தஸ்மாத் லோகாத் புநரேதி அஸ்மை லோகாய கர்மணே – அந்த லோகத்திலிருந்து கர்மம் இயற்றுவதற்காக மீண்டும் இங்கு வருகிறான் – என்று ஆத்மா மீண்டும் இறங்கி வருவதையும், எந்தவிதமான தோஷமும் இல்லாத ப்ரமாணமாகிய வேதாந்த சாஸ்த்ரம் கூறுவதால், “ஆத்மா அணு அளவே ஆகும்” என்று கருத்து. ஆத்மாவானது விபு என்பதால், இவை எதுவும் பொருந்தாது. ப்ரஹ்மஸூத்ரகாரரும் ஆத்மாவின் அணு அளவு குறித்து உரைக்கும்போது, ப்ர. ஸூ. (2-3-20) - உத்க்ராந்தி கதி ஆகதீநாம் - சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புதல், நகர்தல், மீண்டும் திரும்புதல் ஆகியவை கூறப்படுவதால் (விபு அல்லன்) என்று உரைத்தார். மேலும் முண். (3-1-9) - ஏஷ அணு: ஆத்மா சேதஸா வேதிதவ்ய: - அத்தகைய அணு அளவுள்ள ஜீவாத்மா – என்றும், ச்வே. (5-9) – வாலாக்ர சத பாகஸ்ய சததா கல்பிதஸ்ய ச | பாகோ ஜீவ: ஸ விஜ்ஞேய: - நெல் நுனியின் நூறில் ஒரு பங்கை எடுத்து, அதனை நூறு பாகமாக வெட்டினால், அதில் ஒரு பாகமே ஜீவனுடைய அளவு என்று அறியவேண்டும் – என்றும், ச்வே. (5-8) – ஆராக்ரமாத்ர: ஹி அவரோபி த்ருஷ்ட: - சாட்டை நுனியில் உள்ள முள் போன்று நுண்ணியவன் – என்றும், ஸ்வரூபமணுமாத்ரம் ஸ்யாத் ஜ்ஞாநாநந்தைக லக்ஷணம், த்ரஸரேணு ப்ரமாணாஸ்தே ரச்மி கோடி விபூஷிதா – அணு அளவே உள்ளது; ஞானமயமானது; மூன்று அணுக்கள் சேர்ந்த அளவுள்ள துகளாக நின்று, கோடிக்கணக்கான ஒளியுடன் ப்ரகாசிக்கிறது - என்றும் உள்ளது போன்ற பல ச்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களாலும், ஆத்மாவின் அணுவாக உள்ள தன்மையானது நன்கு உறுதியாக்கப்பட்டது.