Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 13)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

அணுவானபடி என்னென்னில்.

– அசித் விலக்ஷணமாய், அஜடமாய், ஆநந்தரூபமாய், நித்யமாயிருந்தாலும் விபுவாயிருக்கலாமிறே; ஏவம் பூதமான ஆத்ம ஸ்வரூபமணுவென்று அறியும்படி யெங்ஙனே என்கிற ஜிஜ்ஞாஸு ப்ரச்நத்தையநுவதிக்கிறார் (அணுவானபடி யென்னென்னில்) என்று.

அசித் பொருள்களைக் காட்டிலும் மேம்பட்டதாகவும், ஜடப்பொருள் அல்லாததாகவும், ஆனந்தரூபமாக உள்ளதாகவும், நித்யமாகவும் இருக்கின்ற ஆத்மாவானது “எங்கும் நிறைந்தது” என்ற தன்மை கொண்டிருக்கலாம் அல்லவா? ஆனால் இப்படிப்பட்ட ஆத்மாவானது அணு அளவே ஆனது என்று எப்படி அறியப்படுகிறது என்று அறிவுள்ளவர்கள் எழுப்பும் கேள்வியை உரைக்கிறார்.