Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 11)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
நித்யமாகையாவது - எப்போதுமுண்டாகை.
– நித்யத்வமாவது ஸர்வகால வர்த்தித்வம். அத்தையருளிச் செய்கிறார், “எப்போது முண்டாகையென்று”.
நித்யம் என்றால் அனைத்து காலத்திலும் தொடர்ந்தபடி உள்ள தன்மையாகும். இதனை இங்கு “எப்போதும் உண்டாகை” என்று அருளிச்செய்கிறார்.