Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 9)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
ஆநந்தரூபமாகையாவது - ஸுகரூபமாயிருக்கை.
– ஆநந்தரூபத்வமாவது ஸ்வத ஏவேஷ்டத்வம். அதாவது ஸ்வபாவமே யநுகூலமாயிருக்கை. “அநுகூலம் ஸுகம் துக்கம ப்ரதிகூலமிதி ஸ்திதே:, ஸ்வாத்மா ஸ்வஸ்யாநுகூலோஹீத்யாத்ம ஸாக்ஷிக ஏவ ஸ” என்கிறபடியே தனக்குத்தானே ஸுகரூபமாயிருக்கையென்றபடி.
ஆனந்தரூபமாக உள்ள தன்மை என்றால் “இயல்பாகவே இஷ்டமானதாக இருத்தல்”; அதாவது தனது இயல்பாகவே ஏற்புடையதாக இருத்தல். அநுகூலம் ஸுகம் துக்கம ப்ரதிகூலமிதி ஸ்திதே:, ஸ்வாத்மா ஸ்வஸ்யாநுகூலோஹீத்யாத்ம ஸாக்ஷிக ஏவ ஸ - ஸுகம் என்பது ஏற்புடையது, துக்கம் என்பது ஏற்புடையதல்ல, தனது ஆத்மா ஏற்புடையவனே ஆவான், அவன் தனக்குத்தானே ஸாக்ஷியாக உள்ளான் - என்பதற்கு ஏற்ப தனக்குத் தானே இன்பம் அளிக்கவல்லவனாக உள்ளான்.