Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 7)
முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்
இந்த யுக்திகளுக்குக் கண்ணழிவுண்டேயாகிலும், சாஸ்த்ரபலத்தாலே ஆத்மா தேஹாதி விலக்ஷணாகக் கடவன்.
இப்படி யுக்தியாலே ஸாதிதமானவர்த்தத்தை சாஸ்த்ரபலத்தாலே த்ருடீகரிக்கிறார் (இந்த யுக்திகளுக்குக் கண்ணழிவுண்டேயாகிலும் சாஸ்த்ர பலத்தாலே ஆத்மா தேஹாதி விலக்ஷணனாகக் கடவன்) என்று.
இவ்விதம் யூகம் மூலம் நிலை நிறுத்திய ஆழ்பொருளை, சாஸ்த்ரங்களுடைய வலிமையால் உரைக்கிறார்.
(கண்ணழிவுண்டேயாகிலும்) என்கையாலே ஸர்வதா இதுக்குக் கணணழிவு சொல்ல ஒருவர்க்கும் போகாது; அது தானுண்டாய்த்தாகிலும் இவ்வர்த்தம் ச்ருதி ஸ்ம்ருத்யாதி ஸகல சாஸ்த்ர ஸித்தமாகையாலே, சாஸ்த்ர பலந்தானே இவ்வர்த்தத்தை ஸாதிக்குமென்று கருத்து. “பஞ்சவிம்சோயம் புருஷ:”, “பஞ்சவிம்ச ஆத்மா பவதி”, “பூதாநி ச கவர்க்கேண சவர்க்கேண இந்த்ரியாணி ச; டவர்க்கேண தவர்க்கேண ஜ்ஞாந கந்தாதயஸ் ததா மந: பகாரேணைவோக்தம் பகாரேண தவஹஹ்க்ருதி: பகாரேண பகாரேண மஹாந் ப்ரக்ருதிருச்யதே ஆத்மா து ஸ மகாரேண பஞ்சவிம்ச: ப்ரகீர்த்தித:”, “ய: பர: ப்ரக்ருதே: ப்ரோக்த: புருஷ: பஞ்சவிம்சக:, ஸ ஏவ ஸrவபூதாத்மா நர இத்யபிதீ யதே”, “ஆத்மா சுத்தோக்ஷரச் சாந்தோ நிர்க்குண: ப்ரக்ருதே: பர:”, “ப்ரவ்ருத்த்யபசயௌ ந ஸ்த ஏகஸ்யாகிலஜத்துஷு:”, “பிண்ட: ப்ருதக் யத: பும்ஸச் சிர: பாண்யாதி லக்ஷண:, ததோஹமிதி குத்ரைதாம் ஸம்ஜ்ஞாம் ராஜந் கரோம்யஹம்”, “கிம்த்வ மேதச்சிர: கிம்நு உரஸ்தவ ததோதரம், கிமு பாதாதிகம் த்வம்வைதவைதத் கிம்மஹீ பதே ஸமஸ்தாவயவேப்யஸ் த்வம் ப்ருதக்பூப வ்யவஸ்திதம், கோஹமித்யேவ நிபுணோ பூத்வா சிந்தய பார்த்திவ”, “பஞ்சபூதாத்மகே தேஹே தேஹீ மோஹதமோ வ்ருத:, அஹம் மமைததிச்யுச்சை: குருதே குமதிர் மதிம் ஆகாசவாய்வக்நி ஜல ப்ருதிவீப்ய: ப்ருதக்ஸ்திதே, அநாத்மந்யாத்ம விஜ்ஞாநம் க: கரோதி களேபரே” என்று இப்படி ச்ருதி ஸ்ம்ருத்யாதி ஸகல சாஸ்த்ர ப்ரதிபந்நமான ஆத்மாவினுடைய தேஹாதி விலக்ஷணத்வம் துரபஹ்நவம் என்று நினைத்திறே சாஸ்த்ர பலத்தாலே ஆத்மா தேஹாதி விலக்ஷணனாகக் கடவனென்று ஸுநிச்சயமாக வருளிச்செய்தது.
“கண்ணழிவுண்டேயாகிலும்” என்று கூறுவதன் மூலம், இத்தகைய யூகங்களுக்கு எந்தவிதத்திலும் அழிவு உரைக்க இயலாது. இதனையும் பிறர் மறுத்து உரைத்தாலும், இந்தக் கருத்துக்கள் அனைத்தும் ச்ருதி மற்றும் ஸ்ம்ருதி என்பதான அனைத்துவிதமான சாஸ்த்ரங்கள் மூலம் வெளிப்படுவதால், சாஸ்த்ரங்களுடைய வலிமையாலும் இந்தக் கருத்துக்கள் நிலைநாட்டப்படுவதாகக் கருத்து. பஞ்சவிம்சோயம் புருஷ: - புருஷன் இருபத்து ஐந்தாவது தத்வமாகிறான் – என்றும், பஞ்சவிம்ச ஆத்மா பவதி - ஆத்மா இருபத்து ஐந்தாவது தத்வமாகிறான் என்றும், பூதாநி ச கவர்க்கேண சவர்க்கேண இந்த்ரியாணி ச; டவர்க்கேண தவர்க்கேண ஜ்ஞாந கந்தாதயஸ் ததா மந: பகாரேணைவோக்தம் பகாரேண தவஹஹ்க்ருதி: பகாரேண பகாரேண மஹாந் ப்ரக்ருதிருச்யதே ஆத்மா து ஸ மகாரேண பஞ்சவிம்ச: ப்ரகீர்த்தித: - க வரிசையில் உள்ள எழுத்துக்களால் பஞ்சபூதங்களும், ச வரிசையில் உள்ள எழுத்துக்களால் கர்ம இந்த்ரியங்களும், ட வரிசை எழுத்துக்களால் ஞான இந்த்ரியங்களும், ப என்பதால் மனமும், ப2 என்பதால் அஹங்காரமும், ப3 என்பதால் மஹத் தத்வமும், ப4 என்பதால் ப்ரக்ருதியும் கூறப்பட்டது. ம என்பதால் இருபத்து ஐந்தாவது தத்வமான ஆத்மா கூறப்படுகிறான் என்றும், ய: பர: ப்ரக்ருதே: ப்ரோக்த: புருஷ: பஞ்சவிம்சக:, ஸ ஏவ ஸrவபூதாத்மா நர இத்யபிதீ யதே - இருபத்து ஐந்தாவது தத்வமாக எந்த ஒரு புருஷன் கூறப்படுகிறானே அவனே அனைத்து பூதங்களிலும் ஆத்மா எனப்படுகிறான் என்றும், ஆத்மா சுத்தோக்ஷரச் சாந்தோ நிர்க்குண: ப்ரக்ருதே: பர: – ஆத்மா தூய்மையானவன், அழிவற்றவன், சாந்தமானவன், மூன்று குணங்கள் அற்றவன், சரீரத்தைக் காட்டிலும் வேறானவன், அவனுக்கு வளர்தல் தேய்தல் இல்லை - என்றும், பிண்ட: ப்ருதக் யத: பும்ஸச் சிர: பாண்யாதி லக்ஷண:, ததோஹமிதி குத்ரைதாம் ஸம்ஜ்ஞாம் ராஜந் கரோம்யஹம் - எந்த ஒரு காரணத்தால் தலை, கை, கால், போன்ற உறுப்புக்கள் கொண்ட சரீரமானது ஆத்மாவைக் காட்டிலும் வேறானதாக உள்ளதோ, அந்தக் காரணத்தால் “ஆத்மா” என்ற இதன் பெயரை நான் எங்கு கூறுவேன் - என்றும், கிம்த்வ மேதச்சிர: கிம்நு உரஸ்தவ ததோதரம், கிமு பாதாதிகம் த்வம்வைதவைதத் கிம்மஹீ பதே ஸமஸ்தாவயவேப்யஸ் த்வம் ப்ருதக்பூப வ்யவஸ்திதம், கோஹமித்யேவ நிபுணோ பூத்வா சிந்தய பார்த்திவ – நீ இந்தத் தலையா அல்லது தலை உன்னுடையதா, நீ இந்த வயிறா அல்லது வயிறு உன்னுடையதா, நீ இந்த கால் போன்றவையா அல்லது அவை உன்னுடையதா? நீ அனைத்தைக் காட்டிலும் வேறானவனாக உள்ளாய், நீ அனைத்தும் அறிந்தவனோ? அப்படியெனில் இவற்றில் நீ யார் என்று சிந்திப்பாயாக - என்றும், பஞ்சபூதாத்மகே தேஹே தேஹீ மோஹதமோ வ்ருத:, அஹம் மமைததிச்யுச்சை: குருதே குமதிர் மதிம் ஆகாசவாய்வக்நி ஜல ப்ருதிவீப்ய: ப்ருதக்ஸ்திதே, அநாத்மந்யாத்ம விஜ்ஞாநம் க: கரோதி களேபரே – தூய்மையான ஜீவாத்மா, தீயபுத்தி காரணமாக இருளால் சூழப்பட்டவனாக, ஐந்து பூதங்களுடைய மாறுபாடாக உள்ள இந்தச் சரீரத்தில் “நான், என்னுடையது” என்று அகப்படுகிறான். பஞ்சபூதங்களைக் காட்டிலும் வேறாக ஆத்மா உள்ளபோது, யார் இந்தச் சரீரத்தை ஆத்மா என எண்ணுவான்? – என்றும் உள்ள ச்ருதி மற்றும் ஸ்ம்ருதி முதலான அனைத்து சாஸ்த்ரங்களிலும் வெளிப்படுவதாகிய “ஆத்மா சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டது” என்று அறிதல் மிகவும் கடினமானது எனபதை அறிந்த காரணத்தால்தான், தகுந்த சாஸ்த்ரங்களின் வலிமையைத் துணையாகக் கொண்டு இங்கு இவர் “ஆத்மா தேஹாதி விலக்ஷணமாகக் கடவன்” என்று அருளிச் செய்கிறார்.