Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 457)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

“க்ஷேத்ராணி மித்ராணி” என்கிற ச்லோகத்தி லவஸ்தை பிறக்கவேணும் ஸ்வரூபம் குலையாமைக்கு.

இப்படி ஸ்வரூபஹாநி வருமென்னும் பயத்தாலே விடுகிறவளவு போராது, ப்ராப்த விஷயப்ரவண சித்ததையாலே ப்ராக்ருத ஸகல போக்ய வஸ்துக்களும் ப்ரதிகூலமாய்த் தோற்று மவஸ்தை பிறக்கவும் வேணும் ஸ்வரூபம் குலையாமைக் கென்கிறார் மேல் (க்ஷேத்ராணி) என்று தொடங்கி.

இவ்விதம் தனது ஆத்மஸ்வரூபத்துக்குக் கெடுதல் ஏற்படும் என்பதால் உண்டாகும் அச்சம் காரணமாக மட்டும் மனைவியிடம் ஈடுபடுதல் முதலிய விஷயங்களைத் தவிர்த்தால் போதாது; ஸ்வரூபத்துக்கு ஏற்ற விஷயமாக உள்ள ஸர்வேச்வரனிடம் ஈடுபடவேண்டும், இந்த உலகில் உள்ள மற்ற பொருள்கள் அனைத்தும் வெறுக்கத்தக்கவை என்ற சிந்தனை ஏற்படவேண்டும் - இந்த நிலைகள் ஆத்மஸ்வரூபம் குலையாமல் இருப்பதற்கு அவசியமாகும் என்று இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, “க்ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்ராச்ச தாரா: பசவோ க்ருஹாணி, த்வத் பாதபத்ம ப்ரவணாத்ம வ்ருத்தேர் பவந்தி ஸர்வே ப்ரதிகூல ரூபா:” என்று பேரருளாளரான பெருமாளைக் குறித்து ப்ரஹ்மா விஜ்ஞாபித்த ச்லோகத்திற்கு சொல்லுகிற க்ஷேத்ர மித்ர தநாதிகளான ஸமஸ்த வஸ்துக்களு மக்நி கல்பமாய்த் தோற்றும்படியான அவஸ்தை பிறக்கவேணும் ஸ்வரூப ப்ரச்யுதி பிறவாமைக் கென்கை. இந்தச் ச்லோகார்த்தத்தை “நல்ல புதல்வர்” இத்யாதியாலே அருளாளப்பெருமாளெம் பெருமானாரு மருளிச்செய்தாரிறே.

ஹஸ்திகிரி மாஹாத்மயத்தில் – க்ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்ராச்ச தாரா: பசவோ க்ருஹாணி, த்வத் பாதபத்ம ப்ரவணாத்ம வ்ருத்தேர் பவந்தி ஸர்வே ப்ரதிகூல ரூபா: – எனது எஜமானனே! நிலங்கள், நண்பர்கள், செல்வம், புத்திரர்கள் மனைவி, பசுக்கள், வீடுகள் போன்ற அனைத்தும் உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளில் ஈடுபட்டு நிற்பவர்களுக்கு விரோதிகளாக உள்ளன - என்று தேவராஜனைக் குறித்து நான்முகன் உரைத்த ச்லோகத்தில் கூறப்படுவதான நிலை, உறவுகள், செல்வம் போன்ற அனைத்தும் நெருப்பு போன்று சுடுவதாகத் தோன்றவேண்டும் என்ற நிலை ஆத்மஸ்வரூபம் குலையாமைக்காக ஏற்படவேண்டும் என்று கருத்து. இதே ச்லோகத்தின் கருத்தை அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தனது ஞானசாரத்தில் (19) – நல்ல புதல்வர் - என்று பாசுரத்தில் அருளிச்செய்தார்.