Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 453)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
இவனுக்கு நிஷித்தாநுஷ்டாநம் தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே த்யாஜ்யம்.
– அதாவது, ஏவம்பூதனான விவ்வதிகாரிக்கு பரதார பரிக்ரஹாதி நிஷித்தாநுஷ்டாநம், ஸ்வவிநாசத்தையும் ஸ்வாநுஷ்டாநங்கண்ட பரருடைய விநாசத்தையும் பண்ணுகையாலே பரித்யஜிக்கப்படுமதொன்றென்கை.
– இவ்விதம் உள்ள இந்த அதிகாரிக்கு மற்றவர்களுடைய மனைவியை அடைதல் போன்றதான தாழ்ந்த செயல்கள் தனக்கு அழிவையும், தனது ஒழுக்கங்களைப் பார்த்தபடி உள்ளவர்களுக்கு அழிவையும் உண்டாக்குவதால் கைவிடத்தக்கது என்கிறார்.