Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 446)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஆசார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாகையாலே, காலன் கொண்டு மோதிரமிடுமோபாதி.
அநந்தரம், ஆசார்ய விஷயத்தில் ஸ்வகீய ஸ்வீகார முபாயமன்றிக்கே யொழிந்தமையை அருளிச்செய்கிறார் (ஆசார்யனையும்) என்று தொடங்கி.
– அடுத்ததாக, ஆசார்யனை தான் பற்றுகின்ற பற்று என்பதும் உபாயமாக இல்லாமல் உள்ளதை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஆசார்யனையும் உபாயமாகத்தான் ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம், ஸ்வபலித்வ கர்த்ருத்வரூபமாய் ஸ்வரூப நாசகமாயிருக்கிற அஹங்காரத்தையுள்ளே யுடைத்தா யிருக்கையாலே, ஸ்வ விநாசகரமான காலனை ப்ரதி க்ரஹித்து அந்தப் பொன்னாலே அங்குளீயக தாரணம் பண்ணினால் அவத்யகரமாமோபாதி தன்னுடைய ஸ்வரூபத்துக் கவத்யகரமா யிருக்கு மென்கை. ஆகையால் இதுவும் உபாயமன்றியே நின்றதென்று கருத்து.
– ஆசார்யனை உபாயமாகப் பற்றுகின்ற பற்று என்பது, “நான் இவ்விதம் பற்றுகிறேன், இதன் பலன் எனக்குக் கிட்டும்”, என்ற ஆத்மஸ்வரூப விரோதியான அஹங்காரத்தை ஏற்படுத்திவிடும். இது எவ்விதம் உள்ளது என்றால், தன்னுடைய மரணத்தை வரவழைத்துக் கொண்டு அதனால் கிட்டும் பணம் மூலமாக தங்கமோதிரம் வாங்கி அணிவது போன்று உள்ளது. இந்தச் செயல் எத்தனை தாழ்ச்சியோ அது போன்று ஆசார்யனை உபாயமாகப் பற்றும் பற்று என்பதும் ஆத்மஸ்வரூபத்துக்கு ஏற்காத தாழ்ந்த செயல் ஆகும். ஆகவே இது உபாயம் அல்ல என்று கருத்து.