Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 441)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

இரண்டு மயையாதோ, நடுவில் பெருங்குடி யென்னென்னில்;

இப்படி ஆசார்ய ஸம்பந்தத்தை யொழிய பகவத் ஸம்பந்தம் லபியாமையா லாத்மோஜ்ஜீவநத்துக் கிரண்டும் வேணுமென்னுமத்தை தர்சிப்பித்த அநந்தரம், பாகவத விஷய ஸம்பந்தமு மவ்வோபாதி யிவனுக்கவச்யாபேக்ஷித மென்னுமத்தை தர்சிப்பிக்கைக்காக, தத்விஷய ப்ரச்நத்தை யநுவதிக்கிறார் (இரண்டு மமையாதோ? நடுவிற் பெருங்குடி யென்னென்னில்) என்று.

இப்படியாக ஆசார்யஸம்பந்தம் இல்லையென்றால் பகவத் ஸம்பந்தமும் கிட்டாமல் போகும் என்பதால், ஆத்மா கரையேற இந்த இரண்டுமே அவசியமாகும் என்று அருளிச்செய்தார். தொடர்ந்து ஆசார்ய ஸம்பந்தம் போன்றே பாகவதர்களுடைய ஸம்பந்தமும் ஜீவாத்மாவுக்கு அவசியம் என்று உணர்த்தும்விதமாக, அதனைக் குறித்து ஒரு வினாவை எழுப்பிக் கொள்கிறார்.

– அதாவது, ஆத்மோஜ்ஜீவநத்துக்கு பகவத் ஸம்பந்த ஸ்தாபகமான ஆசார்ய ஸம்பந்தமும், தத் ஸ்தாபிதமான பகவத் ஸம்பந்தமுமாகிற உபயமும் போராதோ, ப்ராப்ய மத்யம பர்வோக்ததயா நடுவிற் பெருங்குடிபோலே யிருக்கிற பாகவதர்களோடு “ஸாத்விகைஸ் ஸம்பாஷணம்” என்கிற ஸம்பந்த மத்தைப் பற்றவேண்டுவ தென்கிறதாகி லென்கை.

ஆத்மா கரையேறுவதற்காக பகவத் ஸம்பந்தத்தை நன்றாக ஏற்படுத்தித் தரவல்ல ஆசார்ய ஸம்பந்தமும், அந்த ஆசார்ய ஸம்பந்தம் மூலம் நிலையாக்கப்பட்ட பகவத் ஸம்பந்தமும் என்ற இரண்டும் மட்டும் போதாதோ? ஜீவாத்மாவுக்கு அடையத்தக்க பயனாக உள்ள கைங்கர்யம் என்பதற்கு நடுவில் உள்ளது பகவத் கைங்கர்யம் என்பதாகும் (சூர்ணை 411). இது பாகவதர்களுக்குச் செய்யப்படும் தொண்டுகள் ஆகும். ஒரு கிராமத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் போன்று, “ஸாத்விக ஸாதுக்களுடன் உரையாடுதல்” என்பதான வாக்கியத்திற்கு ஏற்ப உள்ள பாகவதர்களுடைய ஸம்பந்தம் இங்கு எதற்காக வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிக் கொள்கிறார்.