Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 435)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ஆசார்யலாபம் பகவானாலே.

ஏவம்பூதனான வாசார்யன்றன்னை லபிக்கைக்கு ஹேது வேதென்னு மாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (ஆசார்ய லாபம்) என்று தொடங்கி.

இப்படிப்பட்ட ஆசார்யனை அடைவதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, பகவல்லாப ஹேதுவாய் பரமப்ராப்யபூதனான வாசார்யனை லபிக்கை, “ஈச்வரஸ்யச ஸௌஹார்த்தம்” இத்யாதிப்படியே, நிரூபாதிக ஸுஹ்ருத்தாய் விசேஷ கடாக்ஷப் பற்றாசுகளையும் தானே கல்பித்துக்கொண்டு விசேஷ கடாக்ஷத்தை பண்ணி அத்வேஷத்தைப் பிறப்பித்து ஆபிமுக்யத்தை யுண்டாக்கி ஸாத்விக ஸம்பாஷணத்திலே மூட்டி ஸதாசார்ய ப்ராப்தியைப் பண்ணுவிக்கும் நிர்ஹேதுக க்ருபாவானான பகவானாலே யென்கை.

ஸர்வேச்வரனை அடைவதற்குக் காரணமாக உள்ளவரும், மிகவும் உயர்ந்த பேறாக உள்ளவரும் ஆகிய ஆசார்யனை அடைதல் என்பது - ஈச்வரஸ்யச ஸௌஹார்த்தம் - ஸர்வேச்வரனுடைய உயர்ந்த திருவுள்ளம் - என்பதற்கு ஏற்ப, எந்தவிதமான காரணமும் இல்லாமல் நன்மைகள் செய்பவனாயும், ஜீவன் அறியாமல் செய்த புண்ணியங்களையும் அங்கீகரித்து அவனுக்கு விசேஷமான கடாக்ஷங்கள் செய்பவனாயும், தன்னிடம் அவன் விரோதம் பாராட்டாமல் எப்போதும் தன்னிடம் அவன் ஈடுபாடு கொண்டிருக்கும்படிச் செய்பவனாயும், ஜீவாத்மா நல்லவர்களுடன் எப்போதும் கூடியிருக்கும்படிச் செய்பவனாயும், நல்ல ஆசார்யனை அடையும்படிச் செய்பவனாயும் உள்ள, காரணம் இல்லாமல் கருணை காண்பிக்கும் ஸர்வேச்வரனால் ஆகும் என்று கருத்து.