Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 430)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஈச்வரன்தானும் ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டிருக்கும்.
இன்னமொரு ப்ரகாரத்தாலே ஆசார்ய வைபவத்தை ப்ரகாசிப்பிக்கிறார் (ஈச்வரன்றானும்) என்று தொடங்கி.
– மேலும் ஒரு விதத்திலும் ஆசார்யனுடைய மேன்மையை வெளிப்படுத்துகிறார்.
– அதாவது, இதுக்கிட்டுப் பிறவாத வீச்வரன்றானும் இவ்வாசார்யத்வத்தி னேற்றத்தைப்பற்ற விதில் மிகவும் ச்ரத்தை பண்ணி யிருக்கு மென்கை.
ஆசார்யனாக இருக்கும் தன்மையைத் தனது இயல்பாகக் கொள்ளாத ஸர்வேச்வரன், ஆசார்யனாக இருக்கின்ற தன்மையின் ஏற்றத்தைக் கண்டு, தானும் அதில் ஆசையுடன் இருப்பான் என்று கருத்து.