Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 425)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

இப்படி ப்ராப்யத்தை யறுதியிட்டால் அதுக்கு ஸத்ருசமாக வேணுமிறே ப்ராபகம்.

– (ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்திருக்கவேணுமிறே ப்ராபகம்) என்றவிதில், ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யம் சரமபர்வமான ஆசார்ய கைங்கர்ய மென்று நிர்ணயித்தாராய் நின்றார் கீழ்; இந்த ப்ராப்யாநுரூபமான ப்ராபக நிர்ணயம் பண்ணுகிறார் மேல் (இப்படி ப்ராப்யத்தை யறுதியிட்டால்) என்று தொடங்கி.

சூர்ணை 410ல் “ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்திருக்கவேணுமிறே ப்ராபகம்” என்று கூறப்பட்டது; அதில் ஆத்மஸ்வரூபத்துக்கு ஏற்றதாக உள்ள பேறு என்பது இறுதி நிலையான ஆசார்ய கைங்கர்யம் என்று நிரூபித்தார். இத்தகைய பேற்றைப் பெற்றுத் தருகின்ற உபாயம் இத்தகையது என்று இந்தச் சூர்ணையின் நிரூபிக்கிறார்.

– அதாவது, இப்படி ஆசார்ய கைங்கர்யமே ப்ராப்யமென் றறுதி யிட்டால், இந்த ப்ராப்யத்துக்குத் தகுதியாகவேணுமிறே, ஏதத் ப்ராபகமென்கை இத்தால், ஆசார்ய கைங்கர்யமாகிற சரம ப்ராப்யத்துக்கு ஆசார்யனே ப்ராபகனாகவேணு மென்றபடி.

இவ்விதம் ஆசார்ய கைங்கர்யமே அடையத்தக்க பேறு என்று நிரூபித்தால், இத்தகைய பேற்றுக்கு ஏற்றபடி இருப்பதாக அல்லவோ இந்தப் பேற்றைப் பெற்றுத் தரும் உபாயம் இருத்தல் வேண்டும்? ஆகவே ஆசார்ய கைங்கர்யம் என்ற இந்தப் பேற்றுக்கு உபாயமாக ஆசார்யனே இருத்தல் வேண்டும் என்று கருத்து.