Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 418)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
லோகவிபரீதமா யிறே இங்கிருப்பது.
லோகத்தில் தோஷம் ஹேயமாய் குணமுபாதேயமாயன்றோ இருப்பது தோஷம் குணம்போலே உபாதேயமாமோவென்ன அருளிச்செய்கிறார் (லோகவிபரீதம்) என்று தொடங்கி.
இந்த உலகில் பொதுவாக தோஷங்கள் என்பது கைவிடத்தக்கதாகவும், குணம் என்பது கைக்கொள்ளத்தக்கதாகவும் அல்லவோ உள்ளது? அப்படி உள்ளபோது குற்றமானது குணம் போன்று கைக்கொள்ளத்தக்கதாக இருக்குமோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, தோஷம் விடுகைக்குடலாய் குணம் பற்றுகைக் குறுப்பாயிருக்கும் லோகப்ரக்ரியை யன்றியே, தோஷமும் குணம்போலே உபாதேயமாயிறே இவ்விஷயத்தி லிருப்பதென்கை.
– குற்றம் என்பது கைவிடத்தக்கதாகவும், குணம் என்பது கைக்கொள்ளத் தக்கதாகவும் உள்ள நிலையானது உலகவிஷயங்களுக்கு மட்டுமே பொருந்தும். பகவத் விஷயத்தில் அது போன்று இருப்பதில்லை என்று கருத்து.