Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 415)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
விஷயப்ரவணனுக்கு அத்தைவிட்டு பகவத் விஷயத்திலே வருகைக்குள்ள அருமை போலன்று, ப்ரதம பர்வத்தைவிட்டு சரமபர்வத்திலே வருகைக்குள்ள அருமை.
இதுதன்னை விவரிக்கிறார் மேல் விஷய ப்ரவணனுக்கு என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் உரைத்ததை மேலும் விவரிக்கிறார்.
– அதாவது, க்ஷுத்ர விஷயங்களின் புறப்பூச்சான வைலக்ஷண்யத்திலே யீடுபட்டு மீட்கவொண்ணாதபடி அவற்றிலே ப்ரவணனாய் நின்றவனுக்கு அவற்றைக் கைவிட்டு வகுத்த விஷயமான பகவத் விஷயத்திலே வருகைக்குள்ள அருமைபோலன்று, பும்ஸாம் த்ருஷ்டிசித்தாபஹாரியான பகவத் விஷய ப்ரவணனாய் தத்கைங்கர்ய நிரதனானவனுக்கு ப்ரதம பர்வமானவத்தைவிட்டு சரமபர்வமான ஆசார்ய கைங்கர்யத்திலே வருகைக்குள்ள அருமை என்றபடி.
தாழ்ந்த விஷயங்களில் மேற்புறமாக மேன்மைகள் உள்ளது போன்று காணப்படுகின்றன. அவற்றில் ஈடுபட்டு, மீண்டு வர இயலாதபடி அவற்றில் சிலர் மண்டி நிற்கக்கூடும். ஆனல் அவற்றை முற்றிலுமாகக் கைவிட்டுத் தனது இயல்பான எஜமானனாக உள்ள பகவத் விஷயத்தில் சிலர் ஈடுபடக்கூடும். இந்தச் செயலைப் போன்று எளியது அல்ல என்கிறார். எதுவென்றால் - ஆண்களுடைய கண்கள் மற்றும் உள்ளம் ஆகிய இரண்டையும்கூட வசீகரிக்கவல்லதான பகவத் விஷயத்தை எப்போதும் கைக்கொண்டு, பகவானுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்தபடி ஒருவன் இருக்கக்கூடும்; அவன் அதனைக் கைவிட்டு, இறுதி நிலையான ஆசார்ய கைங்கர்யத்தை அடைவது எளியது அல்ல என்கிறார்.