Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 414)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
இதுதான் துர்லபம்.
இந்த சரமபர்வம் லாபத்தி னருமையை தர்சிப்பிக்கிறார் மேல் (இதுதான் துர்லபம்) என்று.
இப்படிப்பட்ட ஆசார்ய கைங்கர்யம் என்ற இறுதி நிலையை எட்டுவது கடினம் அல்லது அரிது என்று உரைக்கிறார்.