Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 401)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

ஸ்ருஷ்ட்யவதாரதிகளைப்போலே ஸ்வார்த்தமாக என்றிறே ஜ்ஞாநாதிக ரநுஸந்திப்பது.

ஸ்ருஷ்ட்யவதாராதிகளைப்போலே ஸ்வார்த்தமாக வநுஸந்திக்கையை ஸித்தவத்கரித்து இதுக்கு த்ருஷ்டாந்தமாக வருளிச் செய்கிறார் (ஸ்ருஷ்ட்யவதா ராதிகளைப் போலே) என்று.

ஸ்ருஷ்டித்தல், அவதாரம் செய்தல் போன்ற செயல்களும் தனக்காகவே ஆகும் என்று (நம்மாழ்வார்) எண்ணுவதை கருத்தில் கொண்டு, அதனையும் ஓர் உதாரணத்தால் அருளிச்செய்கிறார்.

– “முந்நீர் ஞாலத்தில்” முதற்பாட்டிலே, ஸ்ருஷ்டியை ஸ்வார்த்தமாகவும், இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும், அவதாரங்களை ஸ்வார்த்தமாகவும் இவர்தாமே யநுஸந்தித்தருளினாரிறே. (அவதாராதிகள்) என்கிறவிடத்தில், குணசேஷ்டி தாதிகளைச் சொல்லுகிறது.

– திருவாய்மொழி (3-2-1) – முந்நீர் ஞாலத்தில் - என்றுள்ள முதல் பாசுரம் மூலம் ஸ்ருஷ்டி செய்வது நம்மாழ்வாராகிய தனக்காகவே என்றும், (3-2-1) – வன்மா வையம் அளந்த, (3-2-3) – கொல்லா மாக்கோல் – என்றுள்ள இரண்டு மற்றும் மூன்றாம் பாசுரங்கள் மூலம் அவதாரங்கள் செய்தது தமக்காகவே என்றும் நம்மாழ்வார் எண்ணியபடி இருந்தார் அல்லவோ? (அவதாராதிகள்) – இதில் உள்ள “ஆதி = முதலானவை அல்லது தொடக்கமாக உள்ள மற்ற பலவும்” என்பதன் மூலம் அவனுடைய குணங்கள், லீலைகள் போன்றவையும் தமக்காகவே என்று கருத்து.