Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 390)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
அவைதானெவை யென்றால்.
(இவை) என்று கீழருளிச்செய்தவத்தை விசதீகரிக்கைக்காக தத்விஷய ப்ரச்நத்தை அநுவதிக்கிறார் (அவைதானெவை யென்றால்) என்று.
கடந்த சூர்ணையில் “இவை” என்று அருளிச்செய்தார். அதனை மேலும் விரிவாக உரைக்கும்விதமாக, அவை தொடர்பான கேள்வியை “அவை எவை” என்று எழுப்பிக்கொள்கிறார்.