Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 387)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
இவையுங்கூட இவனுக்கு விளையும்படியிறே இவன் தன்னை முதலில் அவன் ஸ்ருஷ்டித்தது.
இப்படி அஜ்ஞாத ஸுக்ருதங்களையாகிலும் ஹேதுவாகக் கொண்டு கடாக்ஷிக்குமளவில் அங்கீகாரம் ஸஹேதுகமாகாதோ வென்ன அருளிச்செய்கிறார் (இவையுங்கூட) என்று தொடங்கி.
இவ்விதம் சேதனன் ஒருவன், தான் அறியாதவிதத்தில் செய்த புண்ணியங்கள் என்றாலும், அதனையும் காரணமாக ஏற்றுக் கொண்டு அருள்புரிகிறான் என்றால், “ஏதோ ஒரு காரணத்தால் ஸர்வேச்வரன் அருள் செய்கிறான்” என்ற தோஷம் ஏற்படாதோ என்னும் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, இந்த யாத்ருச்சிகாதி ஸுக்ருதங்களுமுட்பட இவனுக் குண்டாம் படியிறே இவற்றுக்கும் யோக்யதையில்லாதபடி கரணகளேபர விதுரனாய்க் கிடந்து இவன்றன்னை ஸ்ருஷ்டிகாலத்திலே கரணாதிகளைக் கொடுத்து அவ னுண்டாக்கிற் றென்கை. இத்தால், காடாக்ஷ ஹேதுவாகச் சொன்ன யாத்ருச்சிகாதிகளு மவனுடைய க்ருஷிபல மென்கை. ச சப்தத்தாலே, துல்ய ந்யாயாத் ஜ்ஞாத ஸுக்ருதங்களுக்குமடி அவன் க்ருஷியென்கிறது. அன்றிக்கே, வக்ஷ்யமாண நிரூபண விசேஷங்களை ஸமுச்சயிக்கிற தாகவுமாம். ஸ்ருஷ்டிதான் சேதந கர்மாநுகுணமாகவன்றோ வென்னில்? ஸ்ருஷ்டிப்பது கர்மத்தைக் கடாக்ஷித்தேயாகிலும் யௌகபத்ய மநுக்ரஹ கார்யமிறே.
அதாவது, தான் செய்வது புண்ணியங்கள் என்று அறியாமல் தற்செயலாகச் செய்யும் புண்ணியங்கள் உட்பட அனைத்தும் அவனுக்கு ஏற்படும்படியாக, இந்தச் செயல்கள் செய்வதற்குக்கூட இயலாதவிதத்தில் சரீர இந்த்ரியங்கள் இல்லாமல் கிடந்த இந்தச் சேதனனை, ஸ்ருஷ்டி காலத்தில் சரீர இந்த்ரியங்களை அளித்து அவனைச் செயல் புரியும்படிச் செய்தவன் ஸர்வேச்வரன் அல்லவோ என்று கருத்து. ஆகவே இவனை ஏற்றுக் கடாக்ஷிப்பதற்குக் காரணமாகக் கூறப்பட்ட “தற்செயலாகச் செய்த புண்ணியங்கள்” என்பதும் ஸர்வேச்வரனுடைய முயற்சியால்தான் விளைந்தது என்று அறியவேண்டும். சூர்ணையில் உள்ள “ச” (அதாவது ”இவையும்” என்ற பதம்) என்ற பதம் மூலம், சேதனன் அறிந்ததே செய்யும் புண்ணிய செயல்களும் ஸர்வேச்வரனுடைய முயற்சியே அன்று அறிக. அல்லது, இனிக் கூறப்போகும் வாக்கியங்களில் உள்ளவற்றை அறிவிக்கும்விதமாக “இவையுன்” என்றதாகவும் கொள்ளலாம். கர்மபலன் காரணமாக என்றாலும், அனைத்து சேதனர்களையும் ஒரே ஸ்ருஷ்டி காலத்தில் படைப்பது தனது கருணையால் அல்லவோ?