Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 386)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

ஆகையால் அஜ்ஞாதமான நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு கடாஷியா நிற்கும்.

கீழுக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறார் (ஆகையால் ) என்று தொடங்கி.

இதுவரை உரைக்கப்பட்ட அர்த்தத்தை இந்த வாக்கியத்தால் முடிக்கிறார்.

– அதாவது, கீழ்ச்சொன்ன ப்ரகாரத்தாலே ஸர்வமுக்தி ப்ரஸங்காதிகள் வாராமைக்காக இச்சேதநனறியாமலே விளையுமவையான சில ஸுக்ருத விசேஷங்களையே இவனை அங்கீகரிக்கைக்குப் பற்றாசாகப் பிடித்துக் கொண்டு விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணா நிற்குமென்கை.

இதுவரை உரைக்கப்பட்ட விதத்தில் “அனைவருக்கும் மோக்ஷம் கிட்டும் நிலை ஏற்படும்” முதலான தோஷங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தச் சேதனன் தானாகவே அறியாமல் செய்த புண்ணியங்களையே அவனைத் தான் (ஸர்வேச்வரன்) ஏற்றுக் கொள்வதற்கான காரணம் என்று ஸர்வேச்வரன் தானாகவே கற்பித்துக்கொண்டு, அந்தச் சேதனனுக்கு சிறப்பான கடாக்ஷங்கள் செய்வான்.