Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 379)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம்படி யிருப்பானொருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாமிறே.

இப்படி அநந்யகதித்வாதிக ளுண்டானாலும் அவனுக்குச் சீற்றம் பிறக்கும் படி சிலவற்றைச் சொல்லலாமோவென்ன அருளிச்செய்கிறார் (சீறினாலும்) என்று தொடங்கி.

இவ்விதம் அவன் அல்லாமல் வேறு கதி இல்லை போன்ற பலவும் இருந்தாலும், அவனுக்குக் கோபம் ஏற்படுத்தும்படியான செயல்களைச் செய்யலாமோ அல்லது கூறலாமோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

அதாவது சீறின காலத்திலும் சீற்றத்துக்கு விஷயமானவர்களுக்குச் சென்று திருவடிகளைப் பூண்டுகொள்ளலாம்படி பரமக்ருபாவான யிருப்பானொருவனைப் பெற்றால் நினைத்தபடி யெல்லாம் சொல்லலாமிறே யென்கை.

எத்தனை கோபம் கொண்டாலும், கோபத்திற்கு இலக்கானவர்கள் சென்று திருவடிகளை தலையில் வைத்துக்கொள்ளும்படியான உயர்ந்த கருணை உள்ளவனைப் பெற்றால் எப்படி வேண்டுமானாலும் உரைக்கலாம் என்று கருத்து.