Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 373)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
இரண்டு மிருவர்க்கும் ஸ்வரூபம்
இவ்வநுமதி த்வயமும் பின்னை யேதாவதென்ன அருளிச்செய்கிறார் (இரண்டும்) என்று தொடங்கி.
இவ்விதமாக ஈச்வரன் அனுமதிப்பதும், ஜீவன் அனுமதியைக் காண்பிப்பதும் எந்த காரணத்திற்காக என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– (இருவர்க்கும் ஸ்வரூபம்) என்றது, பரதந்த்ரராயும் ஸ்வதந்த்ரராயு மிருக்கிற இருவர்க்கும் ஸ்வாஸாதாரண காரமென்றபடி. அதாவது, பரதந்த்ரனான இவனுக்கு ஸ்வரக்ஷ்யத்வாநுமதி ஸ்வரூபாதிரேகியல்லாமையாலே ஸ்வரூபம்; ஸ்வதந்த்ரனான அவனுக்கு ஸ்வரக்ஷ்யவஸ்து ரக்ஷணத்தில் ஸ்வாஜ்ஞாரூப சாஸ்த்ராநுகுண நிர்வஹணார்த்தமான ஸம்ஸாராநுமதி ஸ்வாதந்த்ர்ய வேஷமாகையாலே ஸ்வரூபமென்கை.
(இருவர்க்கும் ஸ்வரூபம்) - மற்றவர்களுக்கு எப்போதும் அடிமைப்பட்டிருத்தலும், எப்போதும் ஸ்வதந்த்ரமாக இருந்தலும் என்றுள்ள தன்மைகள் ஜீவனுக்கும் ஸர்வேச்வரனுக்கும் முறையே எப்போதும் உள்ளன என்று கருத்து. அதாவது மற்றவர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் ஜீவன், தன்னைக் காப்பாற்ற ஸர்வேச்வரனுக்கு அனுமதி அளிப்பது என்பது ஜீவஸ்வரூபத்துடன் முரண்பாடு இல்லாமல் உள்ளதால், இது ஜீவனின் ஸ்வரூபம் ஆகிறது. ஸ்வதந்த்ரனாக உள்ள ஸர்வேச்வரன், தன்னால் காப்பாற்றப்படவேண்டிய ஜீவனை ரக்ஷிப்பது என்பது, தனது ஆணையாகவே உள்ள சாஸ்த்ரங்களைப் பின்பற்றி ஸம்ஸாரத்தில் ஜீவன் வாழ்ந்து வருதல் என்பதற்கான அனுமதியாகையால், அது ஈச்வரனின் ஸ்வரூபம் ஆகிறது.