Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 369)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

பந்தாநுஸந்தாநம்.

அதுக்குத்தரம் அருளிச்செய்கிறார் (பந்தாநுஸந்தாநம்) என்று.

– மேலே எழுப்பப்பட்ட கேள்விக்கு இப்போது பதில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, பேறிழவுகளிரண்டு மவனாலே யென்னலாம்படி நிரூபாதிக ரக்ஷகனானவனோடு தங்களுக்குண்டான ஸம்பந்தத்தினுடைய அநுஸந்தாநமென்கை.

ஸர்வேச்வரனை நாம் அடைவதும் இழப்பதும் அவனாலேயே ஏற்படுகிறது. இது போன்று எந்தவிதமான காரணமும் இல்லாமல் காப்பாற்றுபவனாகிய அவனுடன் தமக்கு உள்ள ஸம்பந்தத்தை எண்ணுவதால் ஆழ்வார்கள் இவ்விதம் உரைக்கிறார்கள் என்று கருத்து.